காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்
Chief Minister Palanisamy said that the police and fire department will be filled soon
தமிழக காவல்துறையில் இம்மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, அனைத்து பதவிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 235 ஆகும். இதில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 586. தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் 10 ஆயிரத்து 649.
தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
5538 இரண்டாம் நிலை காவலர்கள்,
1480 சார்பு ஆய்வாளர்கள்,
34 டிஎஸ்பிக்கள்
தீயணைப்பு துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப, 1,434 புதிய தீயணைப்போர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை விரைவில்
56 டிஎஸ்பிக்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இவர்கள் அனைவரும் பயிற்சி முடித்து பணியில் சேரும் போது, தற்போதுள்ள காலி பணியிடங்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
அதே போல்,.மீதமுள்ள தீயணைப்போர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளன.
