ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை இனசுழற்சி அடிப்படையில் நிரப்ப, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கால அட்டவணையுடன் கடிதம் அனுப்பியுள்ளார் (ந.க.எண்.71176/2023/எப்.2, நாள் 20.11.2026). இணையவழி விண்ணப்பம் 04.12.2026 அன்று தொடங்குகிறது.
முக்கிய விவரங்கள் | Key Details
| துறை / Department | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) |
| பதவி / Post | கிராம ஊராட்சி செயலர் (Village Panchayat Secretary) |
| சம்பளம் / Pay | Level 2 – ₹15,900 – ₹58,500 |
| காலிப்பணியிடங்கள் / Vacancies | மாவட்டங்களில் உள்ளவாறு |
| இனசுழற்சி / Reservation | மாவட்டங்களில் உள்ளவாறு |
| விண்ணப்பக் கட்டணம் / Fee | ₹100 – பொது / BC / MBC ₹50 – SC / ST / மாற்றுத்திறனாளிகள் |
| விண்ணப்பம் தொடங்கும் நாள் / Start Date | 04.12.2026 |
| கடைசி நாள் / Last Date | 18.12.2026, இரவு 11.59 மணி |
| விண்ணப்பிக்கும் முறை / Mode | ஆன்லைன் மட்டும் – www.tnrd.tn.gov.in |
வயது வரம்பு | Age Limit (01.07.2026 அன்று)
அரசாணை (நிலை) எண்.68, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2026-ன்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
| பொதுப்பிரிவு | 18 முதல் 35 வரை |
| பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் | 18 முதல் 37 வரை |
| ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் (அருந்ததியர்) / பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை | 18 முதல் 40 வரை |
| மாற்றுத்திறனாளிகள் | அதிகபட்ச வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு |
| முன்னாள் இராணுவ வீரர் (பொதுப்பிரிவு) | 18 முதல் 50 வரை |
| முன்னாள் இராணுவ வீரர் (BC / BCM / MBC / DNC / SC / ST) | 18 முதல் 55 வரை |
குறிப்பு: வேறு ஏதேனும் அரசுப் பணிக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் மேற்கண்ட வயதுச் சலுகையைப் பெற இயலாது.
கல்வித் தகுதி | Qualification
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு
- ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஊராட்சிகளில் விண்ணப்பம் செய்தவர்கள் மறு விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. இவ்வூராட்சிகளிலும் புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- அவ்வூராட்சிகளில் தற்போதைய 1:5 தெரிவுப் பட்டியல் தக்கவைக்கப்பட்டு, புதிதாகப் பெறப்படும் விண்ணப்பங்களில், அப்பட்டியலின் கடைசி விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்ணிற்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ மதிப்பெண் பெற்றவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்படுவர்.
- புதிதாக சேர்க்கப்பட்ட கிராம ஊராட்சிகளின் காலிப்பணியிடங்களுக்கு, ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் உரிய இடஒதுக்கீட்டு இனசுழற்சியின்படி விண்ணப்பங்கள் பெறப்படும்.
கால அட்டவணை | Schedule
| விண்ணப்பங்கள் பெறுதல் (15 நாட்கள்) | 04.12.2026 – 18.12.2026 |
| தெரிவுப் பட்டியல் தயார் செய்தல் (5 நாட்கள்) | 23.12.2026 – 24.12.2026 & 28.12.2026 – 30.12.2026 |
| நேர்காணலுக்கான கடிதம் அனுப்புதல் | 05.01.2027 |
| நேர்காணல் (3 நாட்கள்) | 19.01.2027 – 21.01.2027 |
| தேர்வு முடிவுகள் வெளியிடுதல் | 25.01.2027 |
| பணி நியமன ஆணை வழங்குதல் | 27.01.2027 |
நிபந்தனைகள் | Conditions
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று ஆகியவற்றுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
- இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- 04.12.2026 முதல் www.tnrd.tn.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.
- ஊராட்சி செயலாளர் இணையவழி விண்ணப்ப இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- விவரங்களை நிரப்பி, கல்வி, சாதி மற்றும் முன்னுரிமைச் சான்றுகளைப் பதிவேற்றம் செய்யவும்.
- கட்டணம் செலுத்தி 18.12.2026 இரவு 11.59 மணிக்குள் சமர்ப்பிக்கவும்.
மாவட்ட வாரியான காலிப்பணியிடம் மற்றும் இனசுழற்சி விவரங்கள் http://www.tnrd.tn.gov.in-ல் வெளியானதும் இந்தப் பதிவு புதுப்பிக்கப்படும்.
