TNRD Panchayat Secretary Recruitment 2026 – கிராம ஊராட்சி செயலர் வேலை, டிச.4 முதல் விண்ணப்பம் | 10th Pass

3 min read

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை இனசுழற்சி அடிப்படையில் நிரப்ப, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கால அட்டவணையுடன் கடிதம் அனுப்பியுள்ளார் (ந.க.எண்.71176/2023/எப்.2, நாள் 20.11.2026). இணையவழி விண்ணப்பம் 04.12.2026 அன்று தொடங்குகிறது.

முக்கிய விவரங்கள் | Key Details

துறை / Departmentஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD)
பதவி / Postகிராம ஊராட்சி செயலர் (Village Panchayat Secretary)
சம்பளம் / PayLevel 2 – ₹15,900 – ₹58,500
காலிப்பணியிடங்கள் / Vacanciesமாவட்டங்களில் உள்ளவாறு
இனசுழற்சி / Reservationமாவட்டங்களில் உள்ளவாறு
விண்ணப்பக் கட்டணம் / Fee₹100 – பொது / BC / MBC
₹50 – SC / ST / மாற்றுத்திறனாளிகள்
விண்ணப்பம் தொடங்கும் நாள் / Start Date04.12.2026
கடைசி நாள் / Last Date18.12.2026, இரவு 11.59 மணி
விண்ணப்பிக்கும் முறை / Modeஆன்லைன் மட்டும் – www.tnrd.tn.gov.in

வயது வரம்பு | Age Limit (01.07.2026 அன்று)

அரசாணை (நிலை) எண்.68, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2026-ன்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுப்பிரிவு18 முதல் 35 வரை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர்18 முதல் 37 வரை
ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் (அருந்ததியர்) / பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை18 முதல் 40 வரை
மாற்றுத்திறனாளிகள்அதிகபட்ச வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு
முன்னாள் இராணுவ வீரர் (பொதுப்பிரிவு)18 முதல் 50 வரை
முன்னாள் இராணுவ வீரர் (BC / BCM / MBC / DNC / SC / ST)18 முதல் 55 வரை

குறிப்பு: வேறு ஏதேனும் அரசுப் பணிக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் மேற்கண்ட வயதுச் சலுகையைப் பெற இயலாது.

கல்வித் தகுதி | Qualification

  1. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

  • ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஊராட்சிகளில் விண்ணப்பம் செய்தவர்கள் மறு விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. இவ்வூராட்சிகளிலும் புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • அவ்வூராட்சிகளில் தற்போதைய 1:5 தெரிவுப் பட்டியல் தக்கவைக்கப்பட்டு, புதிதாகப் பெறப்படும் விண்ணப்பங்களில், அப்பட்டியலின் கடைசி விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்ணிற்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ மதிப்பெண் பெற்றவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்படுவர்.
  • புதிதாக சேர்க்கப்பட்ட கிராம ஊராட்சிகளின் காலிப்பணியிடங்களுக்கு, ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் உரிய இடஒதுக்கீட்டு இனசுழற்சியின்படி விண்ணப்பங்கள் பெறப்படும்.

கால அட்டவணை | Schedule

விண்ணப்பங்கள் பெறுதல் (15 நாட்கள்)04.12.2026 – 18.12.2026
தெரிவுப் பட்டியல் தயார் செய்தல் (5 நாட்கள்)23.12.2026 – 24.12.2026 & 28.12.2026 – 30.12.2026
நேர்காணலுக்கான கடிதம் அனுப்புதல்05.01.2027
நேர்காணல் (3 நாட்கள்)19.01.2027 – 21.01.2027
தேர்வு முடிவுகள் வெளியிடுதல்25.01.2027
பணி நியமன ஆணை வழங்குதல்27.01.2027

நிபந்தனைகள் | Conditions

  1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று ஆகியவற்றுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
  3. இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  1. 04.12.2026 முதல் www.tnrd.tn.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. ஊராட்சி செயலாளர் இணையவழி விண்ணப்ப இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. விவரங்களை நிரப்பி, கல்வி, சாதி மற்றும் முன்னுரிமைச் சான்றுகளைப் பதிவேற்றம் செய்யவும்.
  4. கட்டணம் செலுத்தி 18.12.2026 இரவு 11.59 மணிக்குள் சமர்ப்பிக்கவும்.

மாவட்ட வாரியான காலிப்பணியிடம் மற்றும் இனசுழற்சி விவரங்கள் http://www.tnrd.tn.gov.in-ல் வெளியானதும் இந்தப் பதிவு புதுப்பிக்கப்படும்.

Doubt in this topic? / சந்தேகமா? Ask us on WhatsApp →

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop