Site icon Athiyaman team

TNUSRB Police Constable Exam Pattern & Syllabus

TNUSRB இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு முறை (TNUSRB Police Constable Exam Pattern)

TNUSRB இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வு: முழுமையான வழிகாட்டி!

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வு, தமிழக இளைஞர்களின் கனவுப் பணியான காவலர் பணியில் சேர்வதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும். இந்தத் தேர்வுக்கு எப்படி தயாராவது, என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு விரிவான வழிகாட்டியை இங்கே காண்போம்.

டிஎன்யுஎஸ்ஆர்பி (TNUSRB) இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் என இரண்டு நிலைகளைக் கொண்டது. 📝

எழுத்துத் தேர்வு:

தேர்வுப் பகுதி பாடங்கள் வினாக்கள் மதிப்பெண்கள் நேரம்
பகுதி-I தமிழ் மொழித் தகுதித் தேர்வு 80 80 80 நிமிடங்கள் (1 மணி நேரம் 20 நிமிடங்கள்)
பகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு (பொது அறிவு & உளவியல்) 70 70 80 நிமிடங்கள் (1 மணி நேரம் 20 நிமிடங்கள்)

தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானவை

 

  • தகுதித் தேர்வு (Qualifying Nature): பகுதி-I (தமிழ் மொழித் தகுதித் தேர்வு) ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. இதில் நீங்கள் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் (40%) பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் உங்கள் இறுதித் தேர்ச்சிப் பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
  • இறுதி மதிப்பெண்: உங்கள் இறுதித் தேர்ச்சிப் பட்டியல், பகுதி-II-ல் நீங்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அமையும்.
  • எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marks): இந்தத் தேர்வில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படாது. எனவே, அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முயற்சி செய்யலாம்.
  • சரியான வினாக்கள்: முதன்மை எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, நீங்கள் அடுத்த கட்டத் தேர்வுகளுக்குத் தகுதி பெறுவீர்கள். ஆனால் இந்த போட்டித் தேர்வு என்பதால் கட் ஆப் அடிப்படையில் தான் அடுத்த நிலைக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.
  • இன்றைய ஆண்டு நடந்த தேர்வில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடைய கட் ஆப் மதிப்பெண்.

காவலர் பணிக்கான TNUSRB தேர்வு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் அதன் விகிதாச்சாரங்கள் குறித்து விரிவாகக் காணலாம்.

 

TNUSRB காவலர் தேர்வு நடைமுறை: நிலை வாரியான தேர்வு விகிதம்

காவலர் பணிக்கான தேர்வில் மொத்த காலிப் பணியிடங்கள்

3,644+21 ஆகும். இந்த பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்கள் படிப்படியாக பின்வரும் நிலைகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


1. எழுத்துத் தேர்வு (Written Examination)


2. உடற்கூறு அளத்தல் (Physical Measurement Test – PMT)


3. உடல் திறன் போட்டிகள் (Physical Efficiency Test – PET)


4. சிறப்பு மதிப்பெண்கள் (Special Marks)


5. சிறப்பு ஒதுக்கீடுகள் (Special Quotas)

பாடத்திட்டம் (Syllabus) 📚

எழுத்துத் தேர்வின் பாடத்திட்டம் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் தரத்தில் இருக்கும்.

பொது அறிவு (General Knowledge)

உளவியல் தேர்வு (Psychology Test)

Exit mobile version