TN PC Police Constable Exam Age Limit
TN Police 2019
இந்தப் பக்கத்தில் போலீஸ் தேர்விற்கு தேவையான வயது வரம்பு பற்றிய முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் தேர்விற்கு விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு எவ்வாறு இருக்க வேண்டும் எந்த வயதிற்குள் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்ற முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது இந்த தகவலை பயன்படுத்தி உங்கள் வயது வரம்பை கணக்கிட்டு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைத்துப் பதவிகளுக்கும் (Gr.II Police Constable, Gr.II Jail Warder and Fireman) விண்ணப்பிப்போருக்கு இருக்க வேண்டிய வயது வரம்பு்
1. பொதுப் பிரிவினர்
01,07,2019 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும்.
24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்,
(01,07,1995 லிருந்து 01,07,2001 க்குள் பிறந்திருக்க வேண்டும்),
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / (இஸ்லாமியர்)
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்
01,07,2019 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும். 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்
(01,07,1993 லிருந்து 01,07,2001 க்குள்; பிறந்திருக்க வேண்டும்).
3, ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர்
01,07,2019 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்,
(01,07,1990 லிருந்து 01,07,2001 க்குள் பிறந்திருக்க வேண்டும்),
4.ஆதரவற்ற விதவைகள்
01,07,2019 அன்று 18 வயது நிறைவு அடைந்தவராகவும். 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்,
(01,07,1984 லிருந்து 01,07,2001 க்குள் பிறந்திருக்க வேண்டும்),
5. முன்னாள் இராணுவத்தினர். முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர் மற்றும்;
இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ. மத்திய துணை இராணுவப் படை வீரர்கள்
01,07,2019 அன்று 45 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்
(அதாவது 01,07,1974 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்),
குறிப்பு
1 . முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர் இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்றாண்டுகள்
நிறைவு செய்யாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்,
2.முன்னாள் இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள் இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏதேனும்
அரசுப் பணியில் பணியமர்த்தப்பட்டிருந்தால் இத்தேர்வில். அவர்கள் முன்னாள் இராணுவத்தினர் என்பதற்கான சலுகைகளைக் கோர இயலாது,
3. இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும்
கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெற இருப்பின். அவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்யலாம்,
இவ்விதம் விண்ணப்பம் செய்பவர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலக அதிகாரியிடத்தில் உரிய படிவத்தில் சான்றிதழ் பெற்று சுயஉறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்,
S. No Title Download Link
1 PC Video Course Join Video Class
PC Official Notification 2020 Download Link
PC Information Brochure 2020 Download Link
2 போலீஸ் தேர்வுகள் பற்றிய முழு விவரம் Click Here
3 PC Official Notification 2019 Download PDF
4 PC Information Brochure 2019 Download PDF
5 Police Exam Apply Link Apply Herre
6 PC Exam Age Limit Check here
7 How to Apply Online Apply here
8 TN SI Notification -969 Post -2019 Check Here
9 Physical Eligibility for TN SI, Constable Check Here
