Site icon Athiyaman team

Daily Current Affairs in Tamil October 2 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(2 oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Oct 2, 2019

முக்கியமான நாட்கள் 

 

Oct 2-லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் 

Oct 2- மகாத்மா காந்தி பிறந்த நாள் 

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார்.

பிறப்பு: அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 

இறப்பு: ஜனவரி 30, 1948

நாட்டுரிமை: இந்தியன்

Oct 2-மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் 

ஏகே-47 என்ற உலகப்புகழ் பெற்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்த மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் ரஷ்யாவில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது 

Oct 2-காமராஜரின் நினைவு தினம் 

தமிழகத்தின் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று.1954ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜர் பின்னர் 1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று  3 முறை தொடர்ந்து முதல்வராக நீடித்தார். தனது ஆட்சி காலத்தில் ஏராளமான பள்ளிகளை திறந்ததோடு பள்ளி வேலை நாளை 180ல் இருந்து 200 ஆக அதிகரித்தார் காமராஜர். மதிய உணவு திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.அவரது தீவிரமான முயற்சியால் 7 சதவீதமாக இருந்த தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 37 சதவீதமாக அதிகரித்தது. அதனால் தான் ‘கல்விக் கண் திறந்த காமராஜர்’ என மக்கள் போற்றுகின்றனர்.55 ஆண்டுகள்  நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த தினத்தில் விண்ணுலகம் புறப்பட்டார்.

 

தேசிய செய்திகள்

 

150 ரூபாய் நினைவு நாணயம்

ரஷிய நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா

 ரஷியா  இந்தியத் தூதர் – பாலா வெங்கடேஷ் வர்மா

 

விருதுகள்

 

தேசிய அளவில் சிறந்த மாநிலம் தமிழகத்திற்கு விருது

திட்டம் 

 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ – திட்டம் 

 

நியமனங்கள்

 

ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி 

 

விளையாட்டு செய்திகள்

 

உலக தடகள போட்டி

 குழந்தை பெற்ற பிறகு தங்கம் வென்ற முதல் பெண்

உயரம் தாண்டுதல் போட்டி

ஹாக்கி டெஸ்ட் போட்டி 

உலக ஜூனியா் கலப்பு அணி போட்டி

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- oct – 2]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Exit mobile version