Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF –08th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 08 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.With the number of coronavirus cases increasing in Tamil Nadu, the State government has made ‘Auto ePass’ mandatory for all international and domestic passengers coming from other States/UT excepting Karnataka, Andhra Pradesh and Puducherry. An order issued by the Health Secretary says that business travellers visiting the State for a short stay of 72 hours are exempt from home quarantine norms.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

India

2.The Union Health Minister stated that on 7th March 2019, Prime Minister Shri Narendra Modi had declared that henceforth 7th March every year would be celebrated as Jan Aushadhi Diwas for promoting and increasing the outreach of generic medicines.

உயிர் காக்கும் மருந்துகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 ஆம் தேதி வெகுஜன மருந்து தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 7 ஆம் தேதி அறிவித்ததாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

3.Dr. Harsh Vardhan, Union Minister for Health & Family Welfare inaugurated a Jan Aushadhi Centre at Ashok Vihar in Delhi on the occasion of Jan Aushadhi Diwas.

வெகுஜன மருந்து தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், டெல்லி அசோக் விஹாரில் வெகுஜன மருந்து மையத்தை திறந்து வைத்தார்.

4.Prime Minister Narendra Modi addressed the Combined Commanders’ Conference at Kevadia in Gujarat, a three-day brainstorming meet of top military officials that began on March 4.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார், இந்த மூன்று நாள் உயர் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கியது.

5.The Union Minister Dr. Jitendra Singh addressed the 76th Annual Conference of Association of Physicians of India (API), which is being held virtually this year in the wake of the pandemic constraints. The theme of this year’s API conference was “Engaging Minds: Empowering Medicine”.

கொரோனா தொற்றுநோயால் இந்த ஆண்டு இணைய வழியில் நடைபெற்று வரும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (API) 76 வது ஆண்டு மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் உரையாற்றினார். இந்த ஆண்டின் API மாநாட்டின் மையப்பொருள் “ஈடுபாட்டு மனம்: மருத்துவத்தை மேம்படுத்துதல்”.

6.National Payments Corporation of India (NPCI) partnered with SBI Payments to announce the launch of ‘RuPay SoftPoS’ for millions of Indian merchants. This innovative solution has the capability to transform (Near-Field Communication) NFC enabled smartphones into merchant Point of Sale (PoS) terminals for the retailers.

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) எஸ்பிஐ பேமென்ட்ஸுடன் இணைந்து இந்திய வணிகர்களுக்காக ‘RuPay SoftPoS’ தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதுமையான தீர்வு, சில்லறை விற்பனையாளர்களுக்கான ஸ்மார்ட்ஃபோன்களை வணிக பாயிண்ட் ஆஃப் சேல் (PoS) டெர்மினல்களாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.

International

7.A new cultural centre of the High Commission of India was inaugurated by the External Affairs Minister Dr. S. Jaishankar in Dhaka. It is the second cultural centre of the High Commission of India after the Dhanmondi centre at the Indira Gandhi Cultural Centre in Dhaka.

இந்திய தூதரகத்தின் புதிய கலாச்சார மையத்தை டாக்காவில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் திறந்து வைத்தார். இது இந்திய தூதரகத்தின் இரண்டாவது கலாச்சார மையமாகும். முதல் கலாச்சார மையம் டாக்காவில் உள்ள இந்திரா காந்தி கலாச்சார மையத்தில் அமைந்துள்ளது.

Sports

8.After winning the four-Test series by a 3-1 margin against England, India successfully qualified for the final of the inaugural World Test Championship, where they will face New Zealand. The WTC final is scheduled between June 18 and 22 at a yet-to-be-named venue in England.

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற வித்தியாசத்தில் வென்றதன் மூலம், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தில் நடக்கவுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.What is the theme of 76th Annual Conference of Association of Physicians of India?

1. Empowering Doctors

2. Empowering Hospitals

3. Empowering Health

4. Empowering Medicine

இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் 76 வது ஆண்டு மாநாட்டின் மையப்பொருள் என்ன?

டாக்டர்களை மேம்படுத்துதல்

மருத்துவமனைகளை மேம்படுத்துதல்

ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

மருத்துவத்தை மேம்படுத்துதல்

2.‘RuPay SoftPoS’ was launched by

NPCI

SBI Payments

Both 1 and 2

Neither 1 nor 2

‘RuPay SoftPoS’ யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

NPCI

SBI Payments

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

3.Which countries have qualified for the final of the World Test Championship in 2021?

1. India and Australia

2. India and England

3. India and New Zealand

4. India and South Africa

2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எந்த நாடுகள் தகுதி பெற்றுள்ளன?

1. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

2. இந்தியா மற்றும் இங்கிலாந்து

3. இந்தியா மற்றும் நியூசிலாந்து

4. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா

4.Where was recently the Combined Commanders’ Conference held?

Kevadia

Ahmedabad

Gandhi Nagar

Ashok Vihar

சமீபத்தில் ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாடு எங்கே நடைபெற்றது?

கெவாடியா

அகமதாபாத்

காந்தி நகர்

அசோக் விஹார்

5.How many days was the Combined Commanders’ Conference conducted?

2

3

4

5

ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாடு எத்தனை நாட்கள் நடத்தப்பட்டது?

2

3

4

5

6.Where was a Jan Aushadhi Centre inaugurated by the Union Minister for Health & Family Welfare?

Kevadia

Ahmedabad

Gandhi Nagar

Ashok Vihar

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரால் வெகுஜன மருந்து மையம் சமீபத்தில் எங்கே திறக்கப்பட்டது?

கெவாடியா

அகமதாபாத்

காந்தி நகர்

அசோக் விஹார்

7.Where the World Test Championship final is scheduled to happen in 2021?

India

Australia

England

New Zealand

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2021 இல் எங்கே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?

இந்தியா

ஆஸ்திரேலியா

இங்கிலாந்து

நியூசிலாந்து

8.‘RuPay SoftPoS’ is introduced for the benefit of

Farmers

Merchants

Street Vendors

Labours

கீழ்காணும் யாருடைய நன்மைக்காக ‘RuPay SoftPoS’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

விவசாயிகள்

வணிகர்கள்

தெரு வியாபாரிகள்

உழைப்பாளர்கள்

9.Where was recently the new cultural centre of the High Commission of India inaugurated?

Kathmandu

Dhaka

Colombo

Naypyidaw

இந்திய தூதரக புதிய கலாச்சார மையம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

காத்மாண்டு

டாக்கா

கொழும்பு

நேபிடா

 

athiyaman book store

DOWNLOAD  Current affairs -08 MAR- 2021 PDF

Exit mobile version