Site icon Athiyaman team

மின்வாரியத்தில் 8,000 பணியிடங்கள் — TNPSC மூலம் நேரடி தேர்வு! | TNPDCL Field Assistant 2027

BREAKING NEWS  •  அரசாணை வெளியீடு

மின்வாரியத்தில் 8,000 பணியிடங்கள் — TNPSC மூலம் நேரடி தேர்வு!

TNPDCL Field Assistant Recruitment — 8,000 Posts Approved by Tamil Nadu Government

வெளியான நாள்: 29 அக்டோபர் 2026  |  எரிசக்தி துறை அரசாணை: 28.10.2026

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் (TNPDCL) 8,000 Field Assistant (உதவியாளர்) பணியிடங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் TNPSC மூலம் நேரடி தேர்வு செய்து நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி துறை 28.10.2026 அன்று இதற்கான அரசாணையை வெளியிட்டது.

எத்தனை பணியிடங்கள் — எப்போது?

ஆண்டு / Year பணியிடங்கள் / Posts மதிப்பிடப்பட்ட செலவு
2027 5,000 ரூ.213.28 கோடி
2028 3,000 ரூ.127.97 கோடி
மொத்தம் / Total 8,000 ஆண்டுக்கு ரூ.341.26 கோடி

ஊதிய விவரம் / Pay Details

  • அடிப்படை ஊதியம்: ரூ.18,800
  • ஊதிய விகிதம் (Pay Scale): ரூ.18,800 – ரூ.59,900
  • மொத்த மாத செலவு (படிகள் + CPS பங்களிப்பு உட்பட): ஒரு பணியாளருக்கு சுமார் ரூ.35,548

மின்துறையில் காலியிடங்கள் எவ்வளவு?

மாநிலத்தின் நான்கு மின் நிறுவனங்களில் 1,40,635 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • TNPDCL — 1,10,960 பணியிடங்களில் 53,575 காலி
  • TANTRANSCO — 7,851 காலி
  • TNPGCL — 3,075 காலி
  • TNGECL — 1,420 காலி
கவனிக்க: இது அரசு அனுமதி அளித்த செய்தி மட்டுமே. கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப தேதி உள்ளிட்ட முழு விவரங்கள் TNPSC அறிவிக்கை (Notification) வெளியாகும்போதுதான் உறுதி செய்யப்படும். இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

இப்போதே தயாராகுங்கள்!

TNPSC நேரடித் தேர்வு என்பதால், பொது அறிவு (General Studies) + திறனறிவுத் தேர்வு (Aptitude) பாடத்திட்டமே இதற்கான அடித்தளம். Group 4 / Group 2 தயாரிப்பு செய்பவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பு.

வகுப்பு & டெஸ்ட் பேட்ச்: 9994359181  |  காலை 9:30 – மாலை 7:00

தகவல் ஆதாரம்: எரிசக்தி துறை அரசாணை (28.10.2026) — DT Next, Dinakaran, Indian Express Tamil

Exit mobile version