Athiyaman team

Happy Independence Day to All- 72 வது சுதந்திரதின வாழ்த்துக்கள்

72 வது சுதந்திரதின வாழ்த்துக்கள்

நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் நிறைவுற்ற இந்நாளில் உங்கள்அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.

 

1947 ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில் 15 ம் தேதி நம் நாடு சுதந்திரம் பெற்றது. நமதுசுதந்திரப்போராட்ட வீரர்களும் நமது மூதாதையர்களும் துணிவுடன் பலபத்தாண்டுகள் ஈடுபட்ட போராட்டங்கள் பல நூற்றாண்டுகள் செய்த தியாகம்ஆகியவற்றின் பலனாக கிடைத்ததே இந்த சுதந்திரம். இந்த போராட்டத்தில்ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் பிரத்யேக துணிவும், தொலைநோக்குபார்வையும் கொண்டிருந்தார்கள்.

அத்தகைய உயர்ந்த தேச பக்தர்கள் விட்டுச்சென்ற கொடையை நாம்பெற்றுள்ளோம். நமக்கு அவர்கள் சுதந்திரத்தை மட்டும் விட்டுச்செல்லவில்லை.நமது சமுதாயத்தை மேம்படுத்தவும் கடைக்கோடி இந்தியருக்கும் அதிகாரம்வழங்குவதற்கும் வறுமை, சமூக பொருளதார ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலைபெறுவதற்கும் நிறைவேற்றவேண்டிய கடமைகளையும் அவர்கள்விட்டுச்சென்றுள்ளார்கள். நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் அந்த மாவீரர்களுக்குநமது மரியாதையையும் இன்னும் நிறை‍வேற்றாமல் விடப்பட்டுள்ளகடமைகளையும் நமக்கு நினைவூட்டுகின்றன.

நமது இளைஞர்களின் சிந்தனை, லட்சிய வேட்கை தனிப்பட்ட முறையிலும் குடும்பத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும், நாட்டிற்காகவும்ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உணர்வு உள்ளது.இதுவே நாம் விரும்பும் உயர்ந்த தார்மீக கல்வியாகும். கல்வி என்பது ஒரு பட்டமோ,பட்டயமோ பெறுவதுடன் நிற்பதல்ல, மற்றொருவர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட நாம் காட்டும் உறுதியையும் அது பிரதிபலிக்கும்.

இதுவே சக மக்களுக்கு நாம் காட்டும் தோழமையாகும். இதுதான் இந்திய உணர்வு.இதுதான் இந்தியா ஏனெனில் இந்தியா என்பது அரசு அல்ல, அரசுக்கு மட்டும்சொந்தமானதல்ல, மக்களுக்கு சொந்தமானது.

 

Exit mobile version