TNTET Exam 2018
ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்
TNTET ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் – பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு.
அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு (TN TET Exam) கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
ஜூலை மாதம் முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லை என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை இனி இருக்காது என தெரிவித்தது.
இது மட்டுமின்றி போட்டி தேர்வு தனியாக நடைபெறும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தனியாகவும்,
நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனியாகவும் நடைபெறும்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும் , TNTET தேர்விற்க்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி (நியூ சிலபஸ்) தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET Exam) குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
இந்த மாத இறுதிக்குள் TNTET Exam ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பட்டியல் வெளியிடப்படும்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு நேரம் அளிக்கப்படும்.
அதன் பிறகு ஆன்லைன் மூலம் (TNTET Online Exam) தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
