Athiyaman team

TNPSC தேர்வு விரைவில் குரூப் 4 VAO

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

3 ஆயிரம் பணியிடங்கள்

வருவாய்த்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சியிடம் கேட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் கரோனா காலத்தால் நிரப்பப்படாமல் உள்ளது. விரைவில் இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காலி பணியிடங்கள்
இது தொடர்பாக அப்பாவு கூறுகையில். ” தமிழ்நாட்டில் மொத்தம் 12754 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 12618 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக செயல்படும் கிராம உதவியாளர்களில் 2 ஆயிரத்து 726 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விரைவில் தேர்வு

இதனிடையே நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் துறை அமைச்சர் கேகே எஸ்எஸ் ஆர் ராமசந்திரன்,தமிழகத்தில் விஏஒக்கள் காலி பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை கேட்டுள்ளோம். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதேபோல கிராம உதவியாளர் பணியிடங்கள் 2 ஆயிரம் காலியாக உள்ளது. இந்த இடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றார்

விஏஓ, கிராம உதவியாளர் பணியிடங்கள் தொடர்பாக பேசிய அமைச்சர், “தமிழகத்தில் விஏஓக்கள் காலி பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை கேட்டுள்ளோம். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதுபோல் 3 ஆயிரம் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களும் விரைவில் நியமனம் செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Install Athiyaman App

ORDER TNPSC GROUP 2 2A Group 4  BOOKS

Exit mobile version