RRB JE 2019 Last Minute Exam Tips
தேர்வு எழுதுவதற்கு தேவையானவற்றை மறக்காமல் கொண்டு செல்லவும். தேர்வு பற்றிஎந்த ஒரு பயமும் பதட்டமும் இல்லாமல் உங்களுக்கு தெரிந்தவற்றை சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள்.
அதுவே உங்களுக்கு தேர்வை பற்றிய பயத்தை ஓரளவுக்குக் குறைக்கும். தெரியாத கேள்விகளுக்கு அதிக நேரம் செலவிடுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். நமது நோக்கம் நூறு கேள்விகளுக்கும் சரியாக விடை அளிப்பது அல்ல. முடிந்தவரை அதிகபட்சமான கேள்விகளுக்கு விடை அளிப்பது மட்டுமே. இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான கேள்விகளை மட்டும் நாம் சரியாக பதில் அளித்தால் போதுமானது. மிகவும் சுலபமான கேள்விகள் நிச்சயமாக இருக்கும். அந்த கேள்விகளை தேடி பதில் அளியுங்கள். நேரத்தை சரியாக செலவிடுவது மிகவும் முக்கியமானது தெரியாத கேள்விகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை விட அதனை விட்டுச் செல்வது சிறந்தது அதேபோல விடை தெரியாமல் அதிக நேரம் ஒரே கேள்வியில் முயற்சி செய்து கொண்டிருந்தாள் அதனை தவிர்த்து அடுத்த கேள்விக்கு செல்லவும் எதிர்மறை மதிப்பெண்கள் உள்ளதால் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டாம். தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே சரியாக பதில் அளிக்கவும்.
இந்த தேர்வில் Aptitude 30 மதிப்பெண்கள் Reasoning 25 மதிப்பெண்கள் பொது அறிவு 15 மதிப்பெண்களுக்கும் அறிவியல் பகுதியிலிருந்து இருபத்தைந்து கேள்விகளும் கேட்கப்படும். இதில் உங்களுக்கு எந்த பகுதியில் நன்றாக தெரியும் என்பதை பொருத்து அந்த பகுதியில் அதிக கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சி செய்யவும். உங்களுடைய Strong Sectionல் அதிக நேரத்தை செலவிடவும். அதேபோல கணித பகுதியில் கடைசி நேரத்தில் விடை அளிப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.
இன்று தேர்வு எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் அதியமான் குடும்பத்தின் வாழ்த்துக்கள்.
