TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TAMIL FREE TEST 2
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 25 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS
TAMIL FREE TEST 2
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று சிறப்பிக்கப்படும் மாவட்டம் எது?
(A) திண்டுக்கல்
(B) மதுரை
(C) கன்னியாகுமரி
(D) நாகர்கோவில்
2. ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்ட சொல்
(A) புறஞ்சேரி
(B) குடில்
(C) சேரி
(D) நாடு
3.“பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற’ எனும் வரி இடம் பெற்றுள்ள நூல்
(A) திருமந்திரம்
(B) தேம்பாவணி
(C) திருவருட்பா
(D) திருவாசகம்
4.“தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது” என்றவர் யார்?
(A) எல்லீஸ் துரை
(B) ஜி.யு. போப்
(C) கமில் சுவலபில்
(D) கெல்லட்
5. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
(A) சாமுவேல் பெப்பிசு
(B) ஆனந்த ரங்கன்
(C) காந்தியடிகள்
(D) இராபர்ட் கிளைவ்
6. கூற்று 1 : மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
கூற்று 2 : இவர் இயற்றிய காப்பியத்திற்கு பண்பாட்டு வரலாற்றுக்காப்பியம் என்ற பெயரும் உண்டு.
கூற்று 3 : பெளத்த சமயக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
(A) கூற்று 1, 2 தவறு 3 சரி
(B) மூன்றும் தவறு
(C) கூற்று 1, 2 சரி 3 தவறு
(D) மூன்றும் சரி
7.பொருத்துக
(a) குலசேகர ஆழ்வார் (1) திருமாலின் வில்லின் அம்சமாக பிறந்தவர்
(b) திருமங்கையாழ்வார் (2) திருமாலின் கெளத்துவமணியின் அம்சமாக
பிறந்தவர்
(C) பெரியாழ்வார் (3) திருமாலின் சக்கர அம்சமாக பிறந்தவர்
(D) திருமழியிசை ஆழ்வார் (4) திருமாலின் கருட அம்சமாக பிறந்தவர்
(A) 2 1 4 3
(B) 1 2 3 4
(C) 2 4 3 1
(D) 4 3 2 1
8.“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.” – கூறியவர்
(A) பட்டினத்தார்
(B) திருமூலர்
(C) மாணிக்கவாசகர்
(D) அப்பர்
9.“பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி” என்று ஐம்புலன் ஆளுகையை பாடிய சித்தர்.
(A) அகத்தியர்
(B) அழுகுணிச் சித்தர்
(C) அகப்பேய்ச் சித்தர்
(D) குதம்பைச் சித்தர்
10.“உடையகோவணம் உண்டு, உறங்கப் புறத்தி்ண்ணை உண்டு உணவிங்கு அடைகாய் இலையுண்டு அருந்த தண்ணீர் உண்டு” என்னும் வரிகளைப் பாடியசித்தர்.
(A) சிவ வாக்கியர்
(B) பாம்பாட்டிச் சித்தர்
(C) இடைக்காட்டு சித்தர்
(D) பட்டினத்தார்
11. இயற்கையை தமக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளும் போது பாடும் பாடல் எது?
(A) ஏற்றப்பாட்டு
(B) கொண்டாட்டப் பாடல்
(C) தொழில் பாடல்
(D) தெய்வ வழிபாட்டுப் பாடல்
12. பொருத்தமானதைத் தேர்க.
(i) சம்பந்தர் தனது அனைத்துப் பதிகங்களிலும் இராவணன் பற்றி பாடியுள்ளார்
(ii) சம்பந்தர் தனது அனைத்துப் பதிகங்களிலும் திருமால், பிரம்மா, சிவன் பற்றி
பாடியுள்ளார்
(iii) சம்பந்தர் தனது அனைத்துப் பதிகங்களிலும் தன்னைப் பற்றியும், தன்
ஊரைப்பற்றியும் பாடியுள்ளார்
(A) (i) சரி (ii) சரி (iii) சரி
(B) (i) தவறு (ii) தவறு (iii) சரி
(C) (i) சரி (ii) சரி (iii) தவறு
(D) (i) தவறு (ii) தவறு (iii) தவறு
13. முற்பிறவியில் வேடர் குலத்தலைவன் வீரமுருகனெனும் வேடன் மகளாகச் சேரவள நாட்டின் தென்புறத்தே ஓர் மலையில் வந்து பிறந்து வளர்ந்தாய், நீ’ என பாரதியாரின் வரிகள் இடம் பெற்ற பாடல் தொகுப்பு எது?
(A) கண்ணன் பாட்டு
(B) குயில் பாட்டு
(C) பாப்பா பாட்டு
(D) பாஞ்சாலி சபதம்
14. அழகிய சொக்கநாதர் எழுதிய நூல்
(A) பதசாகித்தியங்கள்
(B) பரப்பிரம்ம விளக்கம்
(C) சித்திரமடல்
(D) பாலர் சுவடி
15. காவடிச்சிந்தின் தந்தை
(A) மருதப்பத் தேவர்
(B) சென்னிகுளம் அண்ணாமலையார்
(C) நவநீத கிருஷ்ணசாமி
(D) சங்கரன் கோவில் திரிபந்தாதி
16. வம்பவ எத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை – பிள்ளைத்தமிழ் நூல் வகை
(A) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
(B) பாவேந்தர் பிள்ளைத்தமிழ்
(C) முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
(D) காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ்
17. இராஜராஜ சோழன் உலா எவ்வகை பாவகை?
(A) கலிவெண்பா
(B) ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பா
18. திராவிட வேதம்………………………
(A) திருவாய்மொழி
(B) திருவாசிரியம்
(C) திருவிருத்தம்
(D) பெரிய திருவந்தாதி
19. இச்சொல்லின் பொருள் ‘இரும்போந்து’
(A) சந்தன மரம்
(B) பருத்த பனைமரம்
(C) நாக மரம்
(D) அரச மரம்
20. சண்பகமாலை சாற்றி சிவனை வழிபட சண்பக நந்தவனத்தை அமைத்ததாய் சண்பக பாண்டியன் என பெயர் பெற்றவர் யார்?
(A) சூடாமணி பாண்டியன்
(B) அதிவீரராம பாண்டியன்
(C) வரகுண பாண்டியன்
(D) சேகர பாண்டியன்
21.“பண்பாட்டு வரலாற்றுக் காப்பியம்” என்று போற்றப்படும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) சீவகசிந்தாமணி
(C) மணிமேகலை
(D) வளையாபதி
22.ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே – இடம் பெறும் நூல்
(A) நாக குமார காவியம்
(B) குண்டலகேசி
(C) யசோதர காவியம்
(D) வளையாபதி
23. அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் – இப்பாடல் இடம் பெற்ற நூல்
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) வளையாபதி
(D) குண்டலகேசி
24. “ஏடாஅ” போன்ற விளிச்சொற்கள் அதிகம் இடம் பெற்ற நூல்
(A) நற்றிணை
(B) கலித்தொகை
(C) பரிபாடல்
(D) புறநானூறு
25. உடன்போக்கு நிகழ்த்திய தலைவனும் தலைவியும் மீண்டு வருதற் கண் நிகழும் கூற்றைப் பாடுபொருளாகக் கொண்ட பத்துப்பாடல்களின் தொகுதி
(A) முன்னிலைப்பத்து
(B) தலைவி இரங்குபத்து
(C) செலவுப்பத்து
(D) மறுதரவுப்பத்து
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
