Site icon Athiyaman team

TAMIL FREE TEST 24 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWER

TAMIL FREE TEST 24 – TNPSC TAMIL MODEL  QUESTIONS – 25 QTS

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS –  TNPSC TAMIL QUESTIONS ANSWERS

 

TAMIL FREE TEST  24

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

1. கூற்று காரணம் சரியா? தவறா
கூற்று: தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்” என்றார்.
காரணம் : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்
(A) கூற்று சரி; காரணம் சரி
(B) கூற்று சரி; காரணம் தவறு
(C) கூற்று தவறு; காரணம் சரி
(D) கூற்று தவறு; காரணம் தவறு

 

 

2. கீழ்காணும் மூன்று தொடர்களுள் சரியானவற்றைத் தெரிவு செய்க
(அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர் வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகம் ஆகும்
(ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
(இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகு
(A) (அ), (ஆ) ஆகியன சரி; (இ) தவறு
(B) (அ) தவறு; (ஆ), (இ) ஆகியன சரி
(C) (அ), (இ) ஆகியன சரி; (ஆ) தவறு
(D) மூன்றும் சரி

 

3. பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லை அறிந்து எழுதுக. Media
(A) மொழியியல்
(B) ஊடகம்
(C) ஒலியியல்
(D) இதழியல்

 

 

4. Side Effect – இதற்கு ஏற்ற கலைச்சொல்லைத் தெரிவு செய்க
(A) நோய்
(B) பக்க விளைவு
(C) மூலிகை
(D) ஒவ்வாமை

 

 

5. கலைச்சொல் அறிக
Inscription
(A) பொறிப்பு
(B) நடுகல்
(C) அகழாய்வு
(D) கல்வெட்டியல்

 

 

6. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
தண்டருள் என்ற சொல்லின் பொருள்
(A) மேலான பொருளே
(B) அதைத் தவிர
(C) குளிர்ந்த கருணை
(D) தொண்டு

 

 

7.பொருத்தமான பொருளைத் தெரிவு செய்
திங்கள்
(A) மலை
(B) நிலவு
(C) கடல்
(D) சூரியன்

 

 

 

8. திருமறைக்காடு என அழைக்கப்படுவது
(A) திருக்கழுக்குன்றம்
(B) விருத்தாச்சலம்
(C) வேதாரண்யம்
(D) ஆற்காடு

 

 

9. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.
ஆட்டு
(A) கூட்டம்
(B) நிரை
(C) ஆடுகள்
(D) மந்தை

 

 

10. கீழ்காணும் சொல்லின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
கல்
(A) குலை
(B) குவியல்
(C) மந்தை
(D) கட்டு

 

 

11. பழம் – இச்சொல்லின் கூட்டுப் பெயர்
குலை
(A) குலை
(B) குவியல்
(C) மந்தை
(D) கட்டு

 

 

12. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
(B) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்
(C) சாண்டியாகோ மீனைப் மிகப்பெரிய பிடித்தார்
(D) பிடித்தார் சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப்

 

 

 

13. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.
(A) பேசவும், தமிழ்மொழி படிக்கவும், எழுதவும் உகந்தமொழி
(B) படிக்கவும், பேசவும், எழுதவும் தமிழ்மொழி உகந்தமொழி
(C) தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்தமொழி
(D) எழுதவும், பேசவும் தமிழ்மொழி படிக்கவும் உகந்தமொழி

 

 

14. சரியான தொடர் எது என்பதைக் கண்டறிந்து எழுதுக.
(A) கூடுகட்டி வாழும் சிட்டுக்குருவி பறவையினத்தைச் சார்ந்தது
(B) சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது
(C) பறவையினத்தைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவி கூடுகட்டும்
(D) சிட்டுக்குருவி பறவையினத்தைச் சார்ந்தது

 

 

15. ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் ஓர் இலக்கியம் சிலப்பதிகாரம்
(B) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம்
(C) தமிழினத்தால் ஒன்றுபடுத்தும் ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம்
(D) தமிழினத்தால் ஒன்றுபடுத்தும் ஓர் இலக்கியம் சிலப்பதிகாரம்

 

 

16. கீழ்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்.
(A) இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஓர் பகலும் ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள்
(C) இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(D) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்

 

 

17. கீழ்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
(A) அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
(B) அழகிய ஒரு சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
(C) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
(D) அழகிய ஓர் சிற்றூரில் குளம் ஒன்று இருந்தது

 

18.சொல் பொருள் பொருத்துக:
(a) விச்சை 1.கதிரவன்
(b) ஈயில் 2.மலை
(c) பரிதி 3.கல்வி
(d) வெற்பு 4.கொடுத்தல்
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 2 3 4 1
(D) 3 4 1 2

 

19.உரு – இச்சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
(A) அழகு
(B) காற்று
(C) நாவாய் ஓட்டுபவன்
(D) கப்பல்

 

 

 

20.சொல்லையும் பொருளையும் பொருத்துக :
(A) பொக்கிஷம் 1. குதிரை
(B) பரி 2. அழகு
(C) சிங்காரம் 3. வீரன்
(D) சூரன் 4. செல்வம்
(A) 2 3 4 1
(B) 1 3 2 4
(C) 3 1 4 2
(D) 4 1 2 3

 

21. பிழை நீக்கி எழுதுக :
புத்தகத்தை எடுத்தது அவன் அல்ல.
(A) புத்தகத்தை எடுத்தது அவன் அல்லன்
(B) புத்தகத்தை எடுத்தது அவன் இல்லை
(C) புத்தகத்தை எடுத்தது அவன் அன்று
(D) புத்தகத்தை எடுத்தது அவன் அல்ல

 

 

22. ஒருமை – பன்மை பிழை நீக்குக : பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) பானையை உடைத்தது கண்ணன் அல்லன்
(B) பானையை உடைத்தது கண்ணன் அன்று
(C) பானையை உடைத்தது கண்ணன் அல்லர்
(D) பானையை உடைத்தது கண்ணன் அல்லீர்

 

23. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A)“ஹிப்பாலஸ்” என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்.
(B) “ஹிப்பாலஸ்” என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினான்.
(C) “ஹிப்பாலஸ் என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்கள்.
(D) “ஹிப்பாலஸ்” என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர்கள்.

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க” என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லை. உங்களைப் பார்த்தால்… என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பிவிட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம்”. அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா! தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டு காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

 

 

24. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
(A) பெற்றோர்
(B) சிறுவன் சிறுமி
(C) மக்கள்
(D) ஆசிரியர்கள்

 

 

25. இந்நிகழ்வு சிறுவனது எப்பண்பை விளக்குகிறது?
(A) பேதைமை
(B) நேர்மை
(C) அறியாமை
(D) கல்லாமை

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 


TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Exit mobile version