Site icon Athiyaman team

Daily Current Affairs – 2019 February 3rd – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (03 Feb 2019 )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  03-02-2019

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மாநில செய்திகள்

 

வங்கதேச எல்லையை மூட மத்திய அரசு திட்டம்

பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை திட்டம் மூலம்  மேற்கு வங்கம் மற்றும் அசாமில் வங்கதேச எல்லையை மூட தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

 

உலக செய்திகள்

 

எகிப்தில் பழமையான மம்மி கண்டுபிடிப்பு

எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு செய்திகள்

 

அமெரிக்காவிடமிருந்து ராணுவத்துக்கு ரைபிள் துப்பாக்கி

உலகில் அதிக எண்ணிக்கையில் ராணுவ வீரர்களை பணியில் வைத்துள்ள நாடுகளில், இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.

இந்திய ராணுவத்தில் காலாட்படையை பலப்படுத்த அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவத்தின் காலாட்படைக்கு 73,000 தாக்குதல் ரக ரைபிள் துப்பாக்கிகள் வாங்கப்படவுள்ளது. இதுதொடர்பான திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

 

அறிவியல் செய்திகள்

 

ஈரான் புதிய ஏவுகணை சோதனை

ஈரான் நாடு மீண்டும் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதும், பறந்து சென்று பாலைவனத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த ஏவுகணை, 1,200 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது  

ஈரான் நேற்று ஃபதே 110 மற்றும் டோண்டார் 69 ஆகிய குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதித்துப் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Download Daily Current Affairs [2019- Feb -3]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Exit mobile version