Daily Current Affairs (Sep 13th to 16th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Sep 13th to 16th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
ISSF உலக துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்
உலக துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பில் ஜுனியர் 25 மீ. ஆண்கள் பிஸ்டல் பிரிவில் உதயவீர் சிங் தங்கம் வென்றார்.
SAFF சாம்பியன்ஷிப்
டாக்காவில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொள்ள உள்ளது இந்தியா.
ஆசிய கோப்பை கிரிக்கெட்
இந்த போட்டியில் 6 அணிகள் [இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்] பங்கேற்கின்றன.
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும்.
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி
ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் உதய்வீர் சித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
அஹ்மெத் கொமெர்ட் போட்டி
இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சிம்ரன்ஜித் கவுர், மோனிகா மற்றும் பாக்யபதி கச்சாரி துருக்கி இஸ்தான்புல்லில் நடந்த அஹ்மெத் கொமெர்ட் போட்டியில் தங்க பதக்கங்களை வென்றனர்.
மெட்வெட் சர்வதேச போட்டி
பெலாரஸ், மின்ஸ்கில் நடக்கும் மெட்வெட் சர்வதேச போட்டியின் 62 கிலோ பிரிவில் இறுதிப்போட்டியில் சாக்சி மாலிக் ஹங்கேரியின் மரியன்னா சாஸ்தினை எதிர்கொள்கிறார்.
பெண்கள் குத்துச்சண்டை போட்டி
எம்.சி மேரி கோம் 48 கிலோ பிரிவில் இந்த ஆண்டின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றார். போலந்தில் உள்ள க்லிவைஸ் நகரில் பெண்கள் சிலேசியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ இளைஞர் பிரிவில் ஜோதி குலியா தங்கம் வென்றார்.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் வென்றது.
மாரத்தானில் கென்ய வீரர் உலக சாதனை
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
முக்கியமான நாட்கள்
செப்டம்பர் 14 – இந்தி திவாஸ்
இந்தி திவாஸ் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டின் இந்த நாளில் நாட்டில் அரசியலமைப்புச் சட்டமன்ற குழு நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக தேவநகரி வடிவில் எழுதப்படும் இந்தி மொழியை அறிவித்தனர்.
செப்டம்பர் 15 – ஜனநாயகத்தின் சர்வதேச நாள்
2007 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 15 , செப்டம்பர் அன்று ஜனநாயகம் பற்றிய கொள்கைகளை ஊக்குவிப்பதற்கும், கடைபிடிக்கும் நோக்கத்துடனான ஜனநாயக சர்வதேச தினமாகக் கண்காணிக்க தீர்மானித்தது.
2018 தீம் : “Democracy under Strain: Solutions for a Changing World”
செப்டம்பர் 16 – ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான சர்வதேச தினம்
செப்டம்பர் 16, ஐ.நா. பொது சபை ஓசோன் அடுக்கை பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக நியமிக்கப்பட்டது.
இந்த ஓசோன் அடுக்கை அழிக்கக்கூடிய பொருட்களின் மீது மான்ட்ரியல் நெறிமுறையை 1987 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16ந் தேதி,கையொப்பம் செய்த இந்த தினத்தின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
அறிவியல் செய்திகள்
பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்
சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
விருதுகள்
மைசூர் வளாகத்தில் உள்ள இன்போசிஸ் ஆனது LEED EBOM (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு தலைமை – தற்போதுள்ள கட்டிடம் செயல்பாடு மற்றும் பராமரிப்பு) அமெரிக்க பசுமை கட்டிட கவுன்சில் பிளாட்டினம் சான்றிதழ் பெற்றது.
நியமனங்கள்
முத்தாஸ் மௌசா அப்தல்லா என்பவர் சூடான் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி ரஞ்சன் கோகோய் என்பவர் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Download Daily Current Affairs (Sep 13th to 16th)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

