Daily Current Affairs (Sep 17th to 19th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Sep 17th to 19th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
மெட்வெட் சர்வதேச மல்யுத்தம் போட்டி
மின்ஸ்க், பெலாரஸில் மெட்வெட் சர்வதேச மல்யுத்த போட்டியில் 62 கிலோ பிரிவில் ஹங்கேரியின் மரியானா சஸ்டின் தோல்வியடைந்து சாக்ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பூஜா தண்டா 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
டெகாஸ்டார் போட்டி
பிரான்சில் டலென்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற டெகாஸ்டார் போட்டியில் உலக சாம்பியன் கெவின் மேயர் 9,126 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையை படைத்தார்.
இவர் டெகாத்லானில் 9,000 புள்ளிகளைக் கடக்கும் மூன்றாவது வீரரானார்.
ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்
ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சஜன் பன்வால் 77 கிலோ கிரீகோ-ரோமன் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
உலக வங்கியுடன் இந்தியா நிதிக்கான கடன் ஒப்பந்தம்
இந்தியா,உத்தரகாண்ட் தொழிலாளர் மேம்பாட்டு திட்டத்திற்கு (யு.கே.டபிள்யு.டி.பி) ஐ.பி.ஆர்.டி.யின் 74 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர கடன் ஒப்பந்தத்தில் உலக வங்கியுடன் கையெழுத்திட்டது.
இந்தியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையே ஒப்பந்தம்
இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நவீனமயமாக்கப்பட்ட உடன்படிக்கை மூலம் அதிக இணைப்புகளைத் திரட்ட புதுப்பிக்கப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
திட்டங்கள்
அகில இந்திய ஓய்வதிய குறைதீர்ப்பு மன்றம்
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறைகளின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்ற நிகழ்ச்சியை தில்லியில் தொடங்கி வைக்கிறார்.
உலக செய்திகள்
விண்வெளி தொழில்நுட்ப இன்குபேசன் மையம்
திரிபுரா தலைநகரான அகர்தலாவில் விண்வெளி தொழில்நுட்ப இன்குபேசன் மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தொடங்கியது.
வட கொரியா, தென்கொரியா அணுசக்தியை கைவிட ஒப்பந்தம்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், பியோங்யாங் தீபகற்பத்தில் இராணுவ அழுத்தங்களை குறைத்து, நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளுதல், அணுசக்தியை கைவிடுதலுக்காக – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ரஷ்யாவின் இராணுவ விமானம் மாயம்
சிரியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில் 14 பேர் கொண்ட ரஷ்ய இராணுவ விமானம் Il-20 காணாமல் போயுள்ளது.
வீர் சுரேந்திர சாய் விமான நிலையம்
புதிதாக கட்டப்பட்ட ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு வீர் சுரேந்திர சாய் எனப் பெயரிட ஒடிசா சட்டசபை, ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Aviaindra -18 விமானப்பயிற்சி
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான விமானப்படை பயிற்சி Aviaindra பயிற்சிக் கழகம் நடத்துகிறது.
லிபெட்ஸ்க், ரஷ்யாவில் 17 செப்டம்பர் முதல் 28 செப்டம்பர் 2018 வரை நடத்தப்படும், மற்றும் டிசம்பர் 10 முதல் 22 டிசம்பர் 2018 வரை இந்தியாவில் ஜோத்பூரில் நடத்தப்படும்.
ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
மூலோபாய நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பிரச்சனைக்குரிய தெற்கு சீனக் கடலில் ஜப்பான் அதன் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியை நடத்தியது.
இந்தியா, ருமேனியா ஒப்புதல்
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையிலும், பல பன்னாட்டு நிறுவனங்களிலும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்தியாவும் ருமேனியாவும் ஒப்புதல் அளித்தது.
அறிவியல் செய்திகள்
மருத்துவ சைக்லோட்ரான் வசதி
புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்புக்கான ரேடியோ ஐசோடோப்களை தயாரிக்க சைக்லோட்ரான் பயன்படுத்தப்படுகிறது.
மாற்று சக்தி சைக்லோட்ரான் மையம் (VECC), கொல்கத்தாவில் மருத்துவ பயன்பாட்டிற்காக இந்தியாவின் மிகப்பெரிய சைக்லோட்ரானான சைக்லோன்-30 செயல்படத் தொடங்கியது.
வணிகம் செய்திகள்
FPI களுக்கான புதிய KYC விதிமுறை
வெளிநாட்டுப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கான புதிய KYC விதிமுறைகளை இந்திய பங்குச் சந்தை மற்றும் செலாவணி வாரியம் (செபி-SEBI) அங்கீகரித்துள்ளது.
மாநாடுகள்
நாஸ்வி[NASVI]-தேசிய சங்கத்தின் தேசிய மாநாடு
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில், இந்தியாவின் தெரு விற்பனையாளர்களின் தேசிய சங்கத்தின் நாஸ்வி[NASVI] இரண்டு நாள் தேசிய மாநாட்டை துவங்கி வைத்தார்.
விருதுகள்
தலாய் லாமா என்பவர் காந்தி குளோபல் பவுண்டேசனின் காந்திதர்ஷன் சர்வதேச விருது [கேரளா] பெற்றார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி என்பவர் காந்திதர்சன் தேசிய விருது பெற்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் என்பவர் சிறந்த முதலமைச்சர் விருது பெற்றார்.
எம்.ஏ. யூசுப் அலி, பி.ஆர�����. ஷெட்டி மற்றும் பி. கோவிந்தன் ஆகியோர் வணிக விருதுகள் பெற்றனர்.
ஜோசப் புளிகன்னெல் என்பவர் மனித நேயத்திற்கான விருது பெற்றார்.
தூய்மையான பள்ளிகள் விருதுகள் 2017-18
தூய்மையான பள்ளிகள் விருதுகள் 2017-18-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
தேசிய தூய்மைப் பள்ளி விருது 2017-18-ம் ஆண்டுக்கான பட்டியலில் புதுச்சேரி கூனிச்சம் பட்டு அரசுத் தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் – CLICK HERE
இணைய போர்ட்டல்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இலச்சினை மற்றும் இணையப் பக்கத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிட்டார்.
நியமனங்கள்
பிரசாந்த் குமார் என்பவர் எஸ்.பி.ஐ. தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சஞ்சய் அகர்வால் என்பவர் வேளாண்மையில் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ப்ரீதம் சிங் என்பவர் பட்டியல் சாதியின் தேசிய ஆணையம் (NCSC) செயலாளராக நியமிக்கப்பட்டார்.
வருண் தவான் & அனுஷ்கா சர்மா ஆகியோர் திறன் இந்தியா பிரச்சாரத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டார்.
Download Daily Current Affairs [2018- Sep – 17 & 19]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

