Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF –02nd Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 02 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Chief Minister Edappadi K.Palaniswami said that all disciplinary and legal actions initiated against government employees and teachers, who took part in the strike during January 2019, would be dropped. He said it was based on the principle ‘let us forget and forgive’.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

2.The Madras High Court has decided to withdraw from February 8 all restrictions and limitations imposed by it on the functioning of trial courts across the State and the Union Territory of Puducherry to contain the spread of COVID-19.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் பிப்ரவரி 8 முதல் முழு அளவில் செயல்படும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

India

3.The Union Budget for the Financial Year 2021-22, presented by the Finance Minister Nirmala Sitharaman in the Parliament on February 01, 2021.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய அரசின் 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

4.The Government of India has proposed a scheme of Mega Investment Textiles Parks (MITRA) to enable the textile industry to become globally competitive, attract large investments, boost employment generation and exports.

ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க, ‘மித்ரா’ (மெகா முதலீட்டு ஜவுளி பூங்காக்கள்) திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

5.The Finance Minister Nirmala Sitharaman on February 1, has announced a “Voluntary Vehicle Scrappage Policy” in the Union Budget to scrap out the unfit and pollution-causing vehicles.

வர்த்தகரீதியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களையும், தனி நபர்கள் பயன்படுத்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களையும் அழிக்க அல்லது பயன்பாட்டிலிருந்து நீக்க ‘பழைய வாகனங்களுக்கான அழிப்புக் கொள்கை’ என்கிற ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

6.The Finance Minister of India, Nirmala Sitharaman, has announced two new centrally sponsored schemes namely, the PM Aatma Nirbhar Swasth Bharat Yojana for healthcare and the Mission Poshan 2.0 to improve the nutritional outcomes while presenting the Union Budget 2021.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட் 2021ல் மத்திய நிதியுதவி வழங்கும் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். அவை, பொது சுகாதாரத்துக்கான ‘பிரதம மந்திரி ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா’ மற்றும் பொது ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான ‘மிஷன் போஷன் 2.0’ ஆகும்.

7.The ASEAN India Hackathon is being organized online from February 1 to February 3, 2021. The ASEAN-INDIA Hackathon is an initiative taken by the Ministry of Education.

‘ஆசியான் இந்தியா ஹாகாதான்’ பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 3, 2021 வரை இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ஆசியான்-இந்தியா ஹாகாதான்’ மத்திய கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.

8.The Army Dental Corps is celebrating its 80th Raising Day on February 01, 2021. The Corps was raised on this day in 1941.

இராணுவ பல்மருத்துவர் பிரிவு தனது 80 வது நிறுவன தினத்தை பிப்ரவரி 01, 2021 அன்று கொண்டாடுகிறது. 1941 ஆண்டு இதே நாளில் இந்த பிரிவு நிறுவப்பட்டது.

International

9.Myanmar’s Army (Tatmadaw) has seized power in a coup against the democratically elected government of Nobel laureate Aung San Suu Kyi, who was detained along with other leaders of her National League for Democracy (NLD) party. The Army said it had carried out the detentions in response to “election fraud”, handing power to military chief Min Aung Hlaing and imposing a state of emergency for one year.

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் (தத்மடாவ்) கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியின் மூலம் அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who presents the Union Budget in the Parliament every year?

President

Prime Minister

Finance Minister

Finance Secretary

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தக்கல் செய்வது யார்?

ஜனாதிபதி

பிரதமர்

நிதி அமைச்சர்

நிதித்துறை செயலாளர்

2.The MITRA scheme announced by the Government of India was related to

Education

Healthcare

Textiles

Transport

இந்திய அரசு அறிவித்துள்ள ‘மித்ரா’ திட்டம் எந்த துறை தொடர்பானது?

கல்வி

உடல்நலம்

ஜவுளி

போக்குவரத்து

3.What is the objective of ‘Voluntary Vehicle Scrappage Policy’?

1. To repair the old vehicles

2. To dispose of the old vehicles

3. To encourage buying new vehicles

4. None of the above

‘தன்னார்வ வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை’யின் நோக்கம் என்ன?

1. பழைய வாகனங்களை சரிசெய்ய

2. பழைய வாகனங்களை அப்புறப்படுத்த

3. புதிய வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்க

4. மேற்கூறிய எதுவும் இல்லை

4.What is the objective of Mission Poshan 2.0?

1. To increase the healthcare facilities

2. To reduce the environmental pollution

3. To increase the nutritional outcomes

4. None of the above

‘மிஷன் போஷன் 2.0’ திட்டத்தின் நோக்கம் என்ன?

சுகாதார வசதிகளை அதிகரிக்க

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க

ஊட்டச்சத்து விளைவுகளை அதிகரிக்க

மேற்கூறிய எதுவும் இல்லை

5.The ASEAN India Hackathon is organised by

1. Ministry of Finance

2. Ministry of Education

3. Ministry of Environment

4. Ministry of Road Transport

‘ஆசியான் இந்தியா ஹாகாதான்’ நிகழ்வு யாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

நிதி அமைச்சகம்

கல்வி அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

சாலை போக்குவரத்து அமைச்சகம்

6.The 80th Raising Day of Army Dental Corps is on

1. February 1

2. February 2

3. February 3

4. February 4

இராணுவ பல்மருத்துவர் பிரிவின் 80 வது நிறுவன தினம் என்று?

1. பிப்ரவரி 1

2. பிப்ரவரி 2

3. பிப்ரவரி 3

4. பிப்ரவரி 4

7.Which of the following countries underwent a military coup recently?

Nepal

Sri Lanka

Bhutan

Myanmar

பின்வரும் நாடுகளில் எந்த நாடு அண்மையில் இராணுவ சதித்திட்டத்திற்கு உள்ளானது?

நேபாளம்

இலங்கை

பூட்டான்

மியான்மர்

 

                                                      DOWNLOAD  Current affairs -02 FEB- 2021 PDF


FEBRUARY MONTH FULL CURRENT AFFAIR PDF

Exit mobile version