Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF –15th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 15 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

India

 

  1. India has rolled out the world’s largest vaccination drive for COVID-19 which started on 16th January, 2021. The country is nearing 3 crore cumulative vaccination doses.

இந்தியா ஜனவரி 16, 2021 ஆம் தேதி கொரோனா தொற்றை தடுக்க உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 3 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

 

  1. The Archaeological Survey of India (ASI) on March10 issued a notification for “reconstitution of the Advisory Committee for the Multidisciplinary Study of the River Sarasvati”. The ASI had first set up the committee on December 28, 2017 for a period of two years.

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) மார்ச் 10 அன்று “சரஸ்வதி நதியின் பன்முக ஆய்வுக்கான ஆலோசனைக் குழு மறுசீரமைப்பிற்கான” அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் முதன் முதலில் டிசம்பர் 28, 2017 அன்று இரண்டு வருட காலத்திற்கு இந்த குழுவை அமைத்தது.

 

  1. Indian Space Research Organisation (ISRO) launched the sounding rocket (RH-560) to study attitudinal variations in the neutral winds and plasma dynamics on March 12, 2021 at Satish Dhawan Space Centre (SDSC), Sriharikota Range (SHAR).

உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ சார்பில் RH-560 ரக சவுண்டிங் ராக்கெட் கடந்த 12-ம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.

 

  1. Justice Indu Malhotra, the first woman Judge to be elevated directly from the Bar and the seventh woman Judge to be appointed at the Supreme Court in 2018, retired on March 13, 2021. With her retirement, Justice Indira Banerjee remains the only woman judge in the top court.

வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக 2018 இல் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அவர்கள் மார்ச் 13, 2021 அன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ள ஒரே பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் ஆகும்.

 

  1. In a major change, the All India Council for Technical Education (AICTE) has said that Physics, Chemistry and Mathematics (PCM) are no longer compulsory for students aspiring to pursue an engineering degree in certain courses.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2021-22 கல்வி ஆண்டின் பாடத் திட்டங்கள் ஒப்புதல் கையேட்டை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) வெளியிட்டுள்ளது. அதில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. Union Minister for Health and Family Welfare Dr. Harsh Vardhan inaugurated the New Green Campus of National Institute for Research in Environment Health (NIREH) in Bhopal.

போபாலில் உள்ள சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி தேசிய நிறுவனத்தின் (NIREH) புதிய பசுமை வளாகத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

 

International 

 

  1. The Indus Commissioners of India and Pakistan will meet here on March 23 and 24 to discuss a host of issues, including Islamabad’s concerns to the design of Indian hydropower projects on the Chenab River. This will be the annual meeting of the Permanent Indus Commission. Under the provisions of the Indus Water Treaty, both the commissioners are required to meet at least once a year alternately in India and Pakistan.

பாகிஸ்தான் – இந்தியா இடையே பாயும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து 1960ல் சிந்து நதி ஒப்பந்தம் போடப்பட்டது. சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக, இரு நாட்டிலும், சிந்து நதி ஆணையர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரு தரப்பும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தும். இந்த ஆண்டு, பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிந்து நதி ஆணையர்கள் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சந்திக்க உள்ளனர்.

 

Sports

 

  1. C.A. Bhavani Devi became the first Indian fencer to qualify for the 2021 Tokyo Olympics.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவி பெற்றுள்ளார்.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1. Who became the first Indian fencer to qualify for the 2021 Tokyo Olympics?

  1. Bhavani Devi

  2. Hima Das

  3. Duet Chand

  4. Dipa Karmarkar

2021 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை யார்?

  1. பவானி தேவி

  2. ஹிமா தாஸ்

  3. டூயட் சந்த்

  4. தீபா கர்மாக்கர்

 

  1. When was the Advisory Committee for the Multidisciplinary Study of the River Sarasvati constituted?

  1. 2016

  2. 2017

  3. 2018

  4. 2019

சரஸ்வதி நதியின் பன்முக ஆய்வுக்கான ஆலோசனைக் குழு எப்போது அமைக்கப்பட்டது?

  1. 2016

  2. 2017

  3. 2018

  4. 2019

 

  1. Who is the only woman judge currently serving in the Supreme Court?

  1. Bhanumati

  2. Indu Malhotra

  3. Indra Banerjee

  4. Fathima Beevi

தற்போது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரே பெண் நீதிபதி யார்?

  1. பானுமதி

  2. இந்து மல்ஹோத்ரா

  3. இந்திர பானர்ஜி

  4. பாத்திமா பீவி

 

  1. The world’s largest vaccination drive for COVID-19 in India was launched on

  1. January 16, 2021

  2. January 17, 2021

  3. January 18, 2021

  4. January 19, 2021

இந்தியாவில் COVID-19 க்கான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் என்று தொடங்கப்பட்டது?

  1. ஜனவரி 16, 2021

  2. ஜனவரி 17, 2021

  3. ஜனவரி 18, 2021

  4. ஜனவரி 19, 2021

 

  1. C.A. Bhavani Devi belongs to

  1. Kerala

  2. Karnataka

  3. Andhra Pradesh

  4. Tamil Nadu

சி.ஏ. பவானி தேவி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

  1. கேரளா

  2. கர்நாடகா

  3. ஆந்திரா

  4. தமிழ்நாடு

 

  1. The National Institute for Research in Environment Health (NIREH) is located in

  1. Hyderabad

  2. Bhopal

  3. Bangalore

  4. Cochin

சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIREH) எங்கு அமைந்துள்ளது?

  1. ஐதராபாத்

  2. போபால்

  3. பெங்களூர்

  4. கொச்சின்

 

  1. RH-560 sounding rocket was recently launched by

  1. NASA

  2. ESA

  3. ISRO

  4. ROSCOSMOS

ஆர்.எச் -560 சவுண்டிங் ராக்கெட் சமீபத்தில் யாரால் ஏவப்பட்டது?

  1. NASA

  2. ESA

  3. ISRO

  4. ROSCOSMOS

 

  1. Who is the first woman Judge to be elevated directly from the Bar to the Supreme Court?

  1. Bhanumati

  2. Indu Malhotra

  3. Indra Banerjee

  4. Fathima Beevi

வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி யார்?

  1. பானுமதி

  2. இந்து மல்ஹோத்ரா

  3. இந்திரா பானர்ஜி

  4. பாத்திமா பீவி

 

1

2

3

4

5

6

7

8

A

B

C

A

D

B

C

B

athiyaman book store

DOWNLOAD  Current affairs -15 MAR- 2021 PDF

Exit mobile version