Athiyaman team

Naalamilla Surappigal Kaanapadum Idangal – Science Topics

நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

உடற்செயலியல் நிகழ்வுகளை வேதியியல்  ஒருங்கிணைப்பு மூலம் தன்னிலைப் பராமரிப்பதே  நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலை ஆகும்.

 

நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வளர்ச்சி, இனப்பெருக்கம், வாழ்வைத் தொடர்ந்து பேணுதல் முதலிய இயற்செயல்களைக் கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் செய்கிறது.

எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தில் உள்ள சுரப்பிகளுக்கும் நாளங்கள் இல்லை.

அவை சுரக்கும் பொருள்களுக்கு ஹார்மோன்கள் என்று பெயர்.

ஹார்மோன்கள் உற்பத்தியாகும்  இடங்களிலிருந்து செயலாற்றும் இடங்களுக்கு  இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.

மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிப் பல்வேறு  இடங்களில் காணப்படுகின்றன.

மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் காணப்படும் பகுதிகள்

தலை 
பிட்யூட்டரி சுரப்பி
பினியல் சுரப்பி

கழுத்து
தைராய்டு சுரப்பி
பாராதைராய்டு சுரப்பி

மார்பு
தைமஸ் சுரப்பி

வயிற்றுப்பகுதி
கணையம் – லாங்கர் ஹான் திட்டுக்கள்

அட்ரீனல் சுரப்பி – அட்ரீனல் கார்டெக்ஸ்,
அட்ரீனல் மெடுல்லா

இனப்பெருக்கச் சுரப்பிகள் – ஆண்களில்
விந்தகம், பெண்களில் அண்டச் சுரப்பி

ஹார்மோன்கள்:
வேதியியல் அடிப்படையில் ஹார்மோன்கள் புரதங்களாகவோ அல்லது ஸ்டீராய்டுகளாகவோ உள்ளன.

ஹார்மோன்கள் மிகக்குறைந்த அளவே சுரந்தாலும் செயல் திறனுள்ளவையாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு : 

[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2018/03/Naalamilla-Surappi-Kaanapadum-Paguthigal.pdf” title=”Naalamilla Surappi Kaanapadum Paguthigal”]

Exit mobile version