Athiyaman team

12th Tamil Book– Book Back Answers- தன்னேர் இலாத தமிழ்-நூல்வெளி

12th Tamil Book– Book Back Answers

தன்னேர் இலாத தமிழ்-நூல்வெளி

 

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

தன்னேர் இலாத தமிழ்-நூல்வெளி

தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. பாடப்பகுதி பொருளணியியல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.

இவர் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது;

இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம்.

இலக்கணக் குறிபபு

உறுப்பிலக்கணம்

1.வந்து = வா(வ) + த் (ந்) + த் + உ

2. உயர்ந்தோர் = உயர் + த் (ந்) + த் + ஓர்

3. விளங்கி = விளங்கு + இ

புணர்ச்சி விதி

1. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

2. தனியொழி = தனி + ஆழி

3. வெங்கதிர் = வெம்மை +கதிர்

பலவுள் தெரிக

1. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
      தன்னேர் இலாத தமிழ்!” – இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

  1. அடிமோனை, அடிஎதுகை
  2. சீர்மோனை, சீர்எதுகை
  3. அடிஎதுகை, சீர்மோனை
  4. சீர்எதுகை, அடிமோனை

விடை : அடிஎதுகை, சீர்மோனை

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

உறுப்பிலக்கணம்

1. இலாத = இலா + (ஆ) + த் +அ

புணர்ச்சி விதி

1. ஓங்கலிடை = ஓங்கல் + இடை

2. இருளகற்றும் = இருள் + அகற்றும்

3. கதிரொன்று = கதிர் + ஒன்று

பலவுள் தெரிக

1. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் நூல்

  1. மாறனலங்காரம்
  2. முத்துவீரியம்
  3. வீரசோழியம்
  4. இலக்கண விளக்கம்

விடை : மாறனலங்காரம்

2. தண்டியலங்காரம் …………………. என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி இயற்றப்பட்டது.

  1. முத்துவீரியம்
  2. குவலயானந்தம்
  3. மாறனலங்காரம்
  4. காவியதர்சன்

விடை : காவியதர்சன்

3. தண்டியலங்கார இலக்கண நூலின் ஆசிரியர் …………………….

  1. தண்டி
  2. முத்துவீரியம்
  3. குவலயானந்தம்
  4. மாறனலங்காரம்

விடை : தண்டி

4. “தமிழ் விரிவை” உணர்த்தப் புலவர் கையாளும் தொடர் ………………… 

  1. வானிலும் உயர்ந்தன்று
  2. வலிமைமிக்கது
  3. நிலத்தினும் பெரிது
  4. கடலினும் ஆழமானது

விடை : வானிலும் உயர்ந்தன்று

5. தமிழ் தோன்றிய மலை

  1. பொதிகை மலை
  2. குடகு மலை
  3. இமய மலை
  4. விந்தியமலை

விடை : பொதிகை மலை

6. காவியதர்சம் என்பது

  1. புராண நூல்
  2. வரலாற்று நூல்
  3. வடமொழி இலக்கணநூல்
  4. நாடக நூல்

விடை : வடமொழி இலக்கணநூல்

7. தண்டி …………….. ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்

  1. கி.பி. 11
  2. கி.பி. 13
  3. கி.பி 12
  4. கி.பி. 14

விடை : கி.பி 12

8. தண்டியலங்காரத்தின் பெரும் பிரிவுகள்

  1. 6
  2. 5
  3. 4
  4. 3

விடை : 3

Tamil Nadu 6th -12  TAMIL Book Back Answers

Download TNPSC App

 

Exit mobile version