Athiyaman team

6th Tamil New Book Term 1 அறிவியலால் ஆள்வோம் Book Back Answers

Tamil Nadu 6th Standard New அறிவியலால் ஆள்வோம் Tamil Book Term 1

Book Back Answers

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

6th Tamil New Book Term 1 அறிவியலால் ஆள்வோம் Book Back Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அவன் எப்போதும் உண்மையையே __________________

  1. உரைக்கின்றான்
  2. உழைக்கின்றான்
  3. உறைகின்றான்
  4. உரைகின்றான்

விடை : உரைக்கின்றான்

2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஆழமான + கடல்
  2. ஆழ் + கடல்
  3. ஆழ + கடல்
  4. ஆழம் + கடல்

விடை : ஆழம் + கடல்

3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. விண் + வளி
  2. விண் + வெளி
  3. வின் + ஒளி
  4. விண் + வொளி

விடை : விண் + வெளி

4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. நீலம்வான்
  2. நீளம்வான்
  3. நீலவான்
  4. நீலவ்வான்

விடை : நீலவான்

5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. இல்லாதுஇயங்கும்
  2. இல்லாஇயங்கும்
  3. இல்லாதியங்கும்
  4. இல்லதியங்கும்

விடை : இல்லாதியங்கும்

II. நயம் அறிக.

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.

  1. ஆழக்கடலின் – ஆய்வுகள்
  2. செயற்கைக்கோள் – செய்தி
  3. எலும்பும் – எந்திரமனிதன்
  4. உலகம் – உள்ளங்கை
  5. இல்லாது – இயங்கும்
  6. உறுப்பை – உடலும்
  7. அணு – அனைத்தும்

2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.

  1. ஆய்வுகள் – செய்து
  2. இயற்கை – புயலும்
  3. நீல – நிலவில்

3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.

  1. பார்க்கின்றான் – நினைக்கின்றான்
  2. சிறக்கின்றான் – உரைக்கின்றான்
  3. படைக்கின்றான் -கொடுக்கின்றான்
  4. காக்கின்றான் – பார்க்கின்றான்
  5. வாழந்திடுவான் – அமைத்திடுவான்

I. பிரித்து எழுதுக

  1. செயற்கைக்கோள் = செயற்கை + கோள்
  2. எந்திரமனிதன் = எந்திரம் + மனிதன்
  3. உள்ளங்கை = உள் + அம் + கை
  4. இணையவலை = இணையம் + வலை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வானத்தில் செலுத்தப்படுவது _________________ 

விடை : செயற்கைக்கோள்கள்

2. எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படுவது _________________

விடை : எந்திர மனிதன்

3. உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.

விடை : இணையவலையின்

4. நாளைய மனிதன் விண்ணிலுள்ள __________________ எல்லாம் நகரங்கள் அமைத்து
வாழ்ந்திடுவான்

விடை : கோள்களில்

Tamil Nadu 6th -12  TAMIL Book Back Answers

Download TNPSC App

Exit mobile version