Athiyaman team

6th Tamil New Book Term 1 காணி நிலம் Book Back Answers

Tamil Nadu 6th Standard New காணி நிலம் Tamil Book Term 1

Book Back Answers

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

6th Tamil New Book Term 1 காணி நிலம்  Book Back Answers

I. சொல்லும் பொருளும்

  1. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
  2. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
  3. சித்தம் – உள்ளம் .

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் __________________

  1. ஏரி
  2. கேணி
  3. குளம்
  4. ஆறு

விடை : கேணி

2. சித்தம் என்பதன் பொருள் _____________________

  1. உள்ளம்
  2. மணம்
  3. குணம்
  4. வனம்

விடை : உள்ளம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _________________

  1. அடுக்குகள்
  2. கூரை
  3. சாளரம்
  4. வாயில்

விடை : அடுக்குகள்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

  1. நன் + மாடங்கள்
  2. நற் + மாடங்கள்
  3. நன்மை + மாடங்கள்
  4. நல் + மாடங்கள்

விடை : நன்மை + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

  1. நிலம் + இடையே
  2. நிலத்தின் + இடையே
  3. நிலத்து + இடையே
  4. நிலத் + திடையே

விடை : நிலத்தின் + இடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. முத்துசுடர்
  2. முச்சுடர்
  3. முத்துடர்
  4. முத்துச்சுடர்

விடை : முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. நிலாஒளி
  2. நிலஒளி
  3. நிலாவொளி
  4. நிலவுஒளி

விடை : நிலாவொளி

III. பொருத்துக.

1. முத்துச்சுடர்போல தென்றல்
2. தூய நிறத்தில் நிலாஒளி
3. சித்தம் மகிழ்ந்திட மாடங்கள்
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

IV. நயம் அறிக.

1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை ச் சொற்களை எடுத்து எழுதுக.

I. சேர்த்து எழுதுதல்

  1. இளமை + தென்றல் – இளந்தென்றல்
  2. பத்து + இரண்டு – பன்னிரண்டு

II. கோடிட்ட இடங்களை நிரப்புதல்

1. பாரதியாரின் இயற்பெயர் ________________

விடை :  சுப்பிரமணியன்

2. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ________________

விடை :  பாரதியார்.

3. பாரதியார் ________________, ________________, ________________ நூல்களை இயற்றி உள்ளார்.

விடை :  பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு

III. பொருத்துக

1. தூண் முத்துச்சுடர்
2. மாடம் அழகு
3. நிலா ஒளி தூயநிறம்
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

Tamil Nadu 6th -12  TAMIL Book Back Answers

Download TNPSC App

Exit mobile version