Site icon Athiyaman team

Engineering Graduates can appear in TET exam

பி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்

தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுதலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிஇ., பி.எட் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தேர்வை எழுதி, பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்ப வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கலை அறிவியல் படிப்பை படித்தவர்கள் மட்டுமே பி.எட் படிக்கலாம் என்ற நிலையை மாற்றி 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் மாணவர்களும் பி.எட் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், டெட் தேர்வை எழுத தகுதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், பி.இ படித்து பி.எட் முடித்தவர்கள் ஆசிரியராக முடியாத சூழல் இருந்தது.

இதனால் பி.எட் படிக்க அனுமதி இருந்தும் பொறியியல் மாணவர்கள் பி.எட் படிப்பில் சேராமல் இருந்தனர். தற்போது பி.இ.,பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராகலாம் என சமநிலைக் குழு அரசாணை வெளியிட்டுள்ளதால், டெட் தேர்வெழுத தகுதி பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version