ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

TET Exam 2019 -Teachers Recruitment Board

he Madras High Court Thursday dismissed a petition seeking to stay the Teachers Eligibility Test (TET) to be held on June 8 and 9, observing that a person who aspires to become a teacher must be competent enough to clear the exam.

Justice N Sathish Kumar rejected the plea of R Sakthivel, a resident of Krishnagiri, seeking to quash clause 11 of the February 11, 2011 TET notification assigning a maximum of seven years validity for TET certificate.

The petitioner submitted though the National Eligibility Test (NET) and State Level Eligibility Test (SLET) were also qualifying examinations similar to TET, the first two certificate have life time validity.

Limiting the validity period of TET certificate was burdening the candidates and complicating the selection process, he said pleading for permanent validity for the TET certificate.

Till the disposal of his main prayer for quashing the 2011 notification, he sought a stay on the notification issued for conducting TET exams on June 8 and 9.

The state government submitted that being a candidate the petitioner cannot dictate the terms of the exam.

ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட்(Tamil Nadu Teachers Eligibility Test) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் வெளியிட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்தது. இந்த தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.

கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் டெட் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க கோரி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கும் நிலையில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என அறிவித்துள்ளது சட்டவிரோதமானது. எனவே, தமிழகத்தில் வரும் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யவேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கானது நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதான பாடத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்காவிட்டால், பிரதான பாடத்தில் ஒரு மதிப்பெண் கூட எடுக்காதவர்கள் அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களாகி விடுவர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், 1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதாமல் உள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்திருப்பதால், இந்த தேர்வுக்கு தடை விதிக்க கூடாது. கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: