TNPSC Group 4 Certificate Verification and Counselling
முக்கிய தகவல்கள் – Important Details
கவனிக்க வேண்டியவை
கவுன்சிலிங்க்கு என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்
TNPSC Group 4 முதல் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு எப்படி நடைபெறும், எப்போது நடைபெறும், என்னென்ன கொண்டு செல்ல வேண்டும், உங்களுக்கு எந்த தேதியில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் மேலும் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் என்ன என்பதன் முழு விவரம் இங்கே தரப்பட்டுள்ள்ளது.
( முதற்கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு குறிப்பாணை)
(எழுத்துத்தேர்வு நடைபெற்ற நாள்: 11.02.2018)
உங்களுக்கு எந்த தேதியில் கலந்தாய்வு மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்ற விவரம் அறிய கீழே உள்ள லிங்கில் உங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்யவும்
Check Your Details
Enter Your Register Number (பதிவு எண்)
வெற்றி பெற்ற அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
குறிப்பாணை எண்..3055/PSD-C3/2017, நாள் 27.11.2018
| பொருள்:- | நேரடித் தெரிவுகள் 2015-2016, 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு –IV (தொகுதி – IV) இல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு முதல் கட்டமாக மூலச் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு – தொடர்பாக |
| பார்வை:- | 1. தேர்வாணையத்தின் 14.11.2017 நாளிட்ட அறிவிக்கை எண்.23/2017.
2. விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்பட்ட மேற்படி பதவிக்கான கணினிவழி விண்ணப்பம். |
| வரிசை எண்: | பதிவு எண்: | தரவரிசை எண். |
| பெயர்: | ||
| சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் கலந்தாய்வு : | நாள் : 09.01.2019 | நேரம் : 8.30 AM |
2015-16,2016-17 மற்றும் 2017-18 ஆம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு –IV (தொகுதி – IV) இல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு முதல் கட்டமாக மூலச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, அன்னார் எண்.3, பிரேசர் பாலச் சாலை, வ.உ.சி. நகர் (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்), சென்னை- 600 003-ல் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைத் தருமாறு அறிவுறுத்தப்படுகிறார். அன்னார் கணினிவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பின்வரும் மூலச்சான்றிதழ்களையும் (Original Certificates), சான்றிதழ்களின் ஒளிம நகல்களையும் (Xerox Copies), தவறாமல் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார். அவ்வாறு வரும்போது அந்த மூலச்சான்றிதழ்களில் ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்ட சான்றிதழ்களையோ சமர்ப்பிக்கத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார். எனவே, பின்வரும் மூலச்சான்றிதழ்கள் அனைத்தையும் கட்டாயம் தன்னுடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
- பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Mark Sheet)
- கல்வித் தகுதிக்கான சான்றிதழ் (14.11.2017) நாளிட்ட தேர்வாணைய அறிவிக்கையின் பத்தி 5(அ)2 கலம் (a) –ல்
உள்ளவாறு) மற்றும் அடிப்படைக் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்
- தமிழில் தேர்ச்சிப் பெற்றதற்கான சான்றிதழ்(SSLC) (அல்லது) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை மொழித் தேர்வில் (முழுத் தேர்வு) தேர்ச்சி பெற்றமைக்கான சான்றிதழ்
- சாதி சான்றிதழ் – அச்சடிக்கப்பட்ட நிரந்தர அட்டையில் (பெண் விண்ணப்பதாரராக இருப்பின் அவரது தந்தையின் பெயரில் இருக்க வேண்டும்), விண்ணப்பதாரரின் நிரந்தர குடியிருப்பு எல்லைக்குட்பட்டுள்ள சார் ஆட்சியர்/ உதவி ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர் / வட்டாட்சியர்/ வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலர் (அ) தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் / கூடுதல் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / சாதி சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புத் துணை வட்டாட்சியர் அவர்களிடமிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும்.
- வயது விதித் தளர்வு கோரிக்கைக்கான உரிய சான்றிதழ்(14.11.2017 நாளிட்ட தேர்வாணைய அறிவிக்கை பத்தி 5(அ) குறிப்பு (2)ல் குறிப்பிட்டுள்ளவாறு)
- முன்னாள் இராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ் (தேர்வாணையத்தின்விண்ணப்பத்தார்களுக்கான அறிவுரைகள் பத்தி 13-ல் குறிப்பிட்ட படிவத்தில்). (முன்னாள் இராணுவத்தினரின் மனைவி/ மகன்/ மகள் – முன்னாள் இராணுவத்தினராக கருதப்பட மாட்டார்.)
- (அ)மாற்றுத்திறனாளி என்பதற்கான உரிய மருத்துவக் குழுவிடமிருந்து (மூன்று உறுப்பினர் அடங்கிய மருத்துவக்குழு) பெறப்பட்ட சான்றிதழ்.
மற்றும்
(ஆ) உடல் ஊனத்தின் தன்மை, சரியான விழுக்காடு (with percentage of disability) மற்றும் அவரது உடல் ஊனம் அவருடைய பணிகளைத் திறம்பட செய்வதில் அவருக்குத் தடையாக இருக்காது என்று கருதுவதாகவும் மருத்துவ குழுமத்தால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். (தேர்வாணையத்தின் விண்ணப்பத்தார்களுக்கான அறிவுரைகள் பத்தி எண். 14 (ஆ) ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு).
8.இறுதிய���க பயின்ற கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைத் சான்றிதழ் (Last Studied Conduct Certificate) (அல்லது)
இறுதியாக அஞ்சல்வழிக் கல்வி / தொலைதூரக் கல்வி பயின்றிருப்பின் அதற்கான சான்று மற்றும் அதற்கு முன் பயின்ற கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்.
- “அ” மற்றும் “ஆ” நிலை(Group ‘A’ or ‘B’) அரசு அதிகாரியிடமிருந்து 14.11.2017 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்.
- (அ) ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்று(Destitute Widow), (விளக்கம்: “ஆதரவற்ற விதவை” என்பது அனைத்து வழியிலிருந்தும் கிடைக்கப் பெறும் மொத்த மாத வருமானமாக ரூ.4000/-ஐ (ரூபாய் நான்காயிரம் மட்டும்) மிகாத தொகை பெறுகின்ற ஒரு விதவையைக் குறிப்பதாகும். இவ்வருமானம் குடும்ப ஓய்வூதியம் (அ) மற்ற வருமானங்கள் (தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈட்டும் வருமானம் உட்பட) எவையேனுமிருப்பின் அவற்றையும் உள்ளடக்கியதாகும்). இத்தகைய விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் / உதவி ஆட்சியர் / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற வேண்டும். விவாகரத்து பெற்றவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார். (சான்றிதழ் சரிபார்த்தல் அன்றே ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்றிதழை (அசல்) கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் அன்னார் ஆதரவற்ற விதவையாக கருதப்பட மாட்டார்).
(ஆ) ஏற்கனவே விண்ணப்பத்தோடு அனுப்பிய ஆதரவற்ற விதவைச் சான்றிதழில் உள்ள குறைபாடு / குறைபாடுகளை உரிய அதிகாரியின் மூலம் திருத்தி, அத்திருத்தத்திற்கான அன்னாரது மேலொப்பம் பெற்ற மூலச் சான்றிதழ்).
- விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டது போன்று இரண்டு கடவுச் சீட்டு அளவு(Passport Size) நிழற்படங்கள்.
12.தடையின்மைச் சான்றிதழ் (NOC) உரிய படிவத்தில் (தற்போது பணிபுரியும் துறைத் தலைவரின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன் கூடியது) (தேவைப்படின்). மேலும், தடையின்மைச் சான்று படிவத்தை (format for NOC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கவும்.
- (அ). தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் பள்ளியின் முதல்வரிடம் கீழ்க்கண்ட படிவத்தில் (Format) பெறப்பட வேண்டும்.
| PSTM CERTIFICATE
This is to certify that Thiru/Tmt……………………………. has studied SSLC during the year from …………….. to ………………… in Tamil Medium. This certificate is issued after verifying the course content/statement of marks/Transfer Certificate. The candidate has/has not obtained scholarship for having studied in Tamil Medium.
Date: Place: Signature of the Principal Seal of the Institution: |
முக்கிய குறிப்பு:-
1. தெரிவாளர் அவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்படியே மேற்குறிப்பிட்ட நாளன்று சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகிறார். எனவே, குறித்த நாள் மற்றும் நேரத்தில் அன்னார் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார். தவறும் பட்சத்தில் அன்னாருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் அறிவுறுத்தப்படுகிறார்.
- சான்றிதழ் சரிபார்ப்பிற்க்குப் பின்னர், தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் அன்று பிற்பகல் நடைபெறும் கலந்தாய்விற்கு அனுமதிக்கபடுவர்
- சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கபடுவார்கள் என உறுதி கூற இயலாது.
செயலாளர்;
