Athiyaman team

குரூப்- 4 தேர்வுக்கு தடை மனு – முழு விவரம்

குரூப்-4 தேர்வுக்கு தடை மனு – முழு விவரம்

TNPSC Group 4 Exam 2019 

குரூப்-4 (TNPSC Group 4 Exam) தேர்வுக்கு தடை விதிப்பதுடன் தேர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை பேரையூர் தாலுகாவைச் சேர்ந்த ஆர்.பாலமுருகன் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 5 ஆயிரத்து 566 குரூப்-4 பணியிடங்களுக்கானத் தேர்வை நடத்தியது.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற நான் அதன்பின்னர் நடந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் கலந்தாய்வு பாதியில் நிறுத்தப்பட்டு 5 ஆயிரத்து 566 பேர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

 


நன்றி தினமணி நாளிதழ்

மேலும் இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 500 பேர் டிஎன்பிஎஸ்சி நடத்தும் வேறு தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று வேறு பணியிடங்கள் கிடைத்ததால் இந்தப் பணியிடங்களில் சேரவில்லை.
மேலும் பலர் பணியில் சேர்ந்த குறுகிய காலத்தில் பணிகளிலிருந்து விலகி விட்டனர். இந்த காலிப்பணியிடங்களைக் கருத்தில் கொள்ளாமல் டிஎன்பிஎஸ்சி கடந்த 2014-ஆம் ஆண்டு புதிதாக குரூப்-4 பணிகளுக்கானத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.

Other Important Links:

Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam

All TNPSC Group 4 Previous Year Question Paper 

Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File

TNPSC Group 4 Exam Full Details

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றும் பணி நியமனம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி டிஎன்பிஎஸ்சி 107 பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கியது. எனக்கு இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. இப்படி ஆண்டுதோறும் புதிதாக குரூப்-4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்படுவதால், ஏற்கெனவே உள்ள காத்திருப்போர் பட்டியல் தானாகவே காலாவதியாகி விடுகிறது.  இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் உள்ள காலியிடங்களைக் கருத்தில் கொண்டு எனக்கு பணி வழங்காமல், தற்போது குரூப்-4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டிருப்பது சட்டவிரோதம்.

எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு தடை விதிப்பதுடன், அதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நன்றி தினமணி நாளிதழ்

TNPSC Exam Notification 2019

Other Important Links:

Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam

TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil

TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016

TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018

All TNPSC Group 4 Previous Year Question Paper 

Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File

TNPSC Group 4 Exam Full Details 

TNPSC Group 4 Exam Pattern

TNPSC Group 4 Exam Previous Year Questions

TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here

Exit mobile version