Site icon Athiyaman team

இந்தியப் பொருளாதாரம் -2 TNPSC GROUP 1 REVISION

இந்தியப் பொருளாதாரம் -2 TNPSC GROUP 1 REVISION

இந்தியப் பொருளாதாரம் -2
வங்கிகள்
முக்கிய குறிப்புகள்

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மைய வங்கியாகும்! 1934 – இல் இயற்றிய பிரிட்டிஷ் அரசின் சட்டப்படி 1935 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது! இது ஐந்து இலட்சம் பங்குகளைக் கொண்ட ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது.

1-1-1949 – ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டது! ரிசர்வ் வங்கி, கீழ்க்கண்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

ஒரு ஆளுநர்
நான்கு துணை நிலை ஆளுநர்கள்
14 உறுப்பினர்கள்
​இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார கொள்கைகளை இயற்றி அதன் அபிவிருத்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு நிறுவன அமைப்பாகும். இது பணவியல் கொள்கையை கட்டுப்படுத்துகிற ஒரு மைய வங்கியாகும். பணவியல் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவது, மற்றும் கண்காணிப்பது, விலை நிர்ணயத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தித் துறைகளில் போதுமான தொகையை உறுதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும். நாட்டிலுள்ள வங்கிகள், மற்றும் நிதி அமைப்புகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுதலும், மற்றும் ஒழுங்கு படுத்துதலும் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளாகும். நாட்டுக்குத் தேவையான பணத்தை அச்சிட்டு வெளியிடுவது, அதன் போதிய இருப்பை மேலாண்மை செய்வது இவ்வங்கியின் பொறுப்பாகும். அரசு உட்பட வேறு யாருக்கும் பணம் அச்சிடும் அதிகாரம் கிடையாது. வெளி வர்த்தகம் மற்றும் பணம் செலுத்தும் வசதி, நாட்டின் அந்நியச் செலாவணி, மற்றும் சந்தைகளை மேலாண்மை செய்வது போன்ற பணிகளை இந்த வங்கி செய்கிறது. மத்திய , மாநில அரசாங்கங்களின் வணிக வங்கிப் பணிகளை செய்வதோடு அவர்களின் வங்கியாகவும் செயல்படுகிறது. அனைத்து வங்கிகளின் கணக்குகளையும் பராமரிக்கிறது. எனவே இது அரசுக்கும், வங்கிகளுக்குமான வங்கி’ என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக நாட்டின் சிறந்த பொருளியல் அறிஞர்கள் இதன் தலைவர்களாக இருப்பார்கள். இதன் தலைவர்கள், நிர்வாக இயக்குநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டாலும் இந்த வங்கி தன்னிச்சையாக இயங்கும் அதிகாரம் கொண்டது.

ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் மும்பை. இதன் நான்கு மண்டல அலுவலகங்கள்; மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் புதுதில்லி ஆகியனவாகும்.

ரிசர்வ் வங்கியின் பணிகள்!

ரிசர்வ் வங்கி மத்திய அரசின் வங்கியாகவும், முகவராகவும், ஆலோசகராகவும் செயல்படுக்கிறது.
அன்னிய செலாவணி இருப்பைக் கட்டுப்படுத்துகிறது.
பண நோட்டு அச்சடிப்பு (ஒரு ரூபாய் தவிர) மற்றும் பணப்புழக்கத்தை நிர்ணயம் செய்கிறது. பணம் அளிக்கும் முறையில் மைய வங்கியானது தன்னிடத்தே குறிப்பிட்ட அளவு தங்கத்தையும், அன்னியச் செலாவணி இருப்பு மற்றும் வைப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு பணத்தை அச்சிட்டு வெளியிடுகிறது.
வங்கிகளின் வங்கியாகச் செயல்படுகிறது.
கடனைப் பொருத்தவரையில் வணிக வங்கிகளின் கடைசித் தஞ்சமாக ரிசர்வ் வங்கி விளங்குகிறது.
பொதுக் கடன்களை நிர்வகிக்கிறது.
ரிசர்வ் வங்கியின் பிற பணிகள்!

பொருளாதார விவரங்களை வெளியிடுதல் மற்றும் கட்டுப்படுத்துதல். அரசுப் பத்திரங்களை வாங்குவது மற்றும் விற்பது.
அரசுக்குக் கடன் வழங்குதல்.
பன்னாட்டு நிதி அமைப்பில் இந்தியாவின் சார்பில் உறுப்பினராக உள்ளது.
இங்கு தனியார் கணக்கு துவங்க முடியாது.
இங்கு தனியார் கடன் வாங்க முடியாது.
ரூபாய் மற்றும் நாணயம் அச்சிடப்படும இடங்கள்

1.நாசிக் (மகாராஷ்டிரம்)
2. மும்பை (மகாராஷ்டிரம்)
3. ஹைதராபாத் (ஆந்திரம்)
4. தீவாஸ் (மத்தியப் பிரதேசம்)
5. ஹோசங்காபாத் ( மத்தியப்பிரதேசம்)
6. கொல்கத்தா ( மேற்கு வங்கம்)

கரன்சி நோட்டுக்களும் படங்களும்!

2000 ரூபாய் நோட்டு – மங்கள்யான்
500 ரூபாய் நோட்டு – செங்கோட்டை
200 ரூபாய் நோட்டு – சாஞ்சி ஸ்தூபி, மற்றும் ஸ்வச் பாரத் சின்னம்.
100 ரூபாய் நோட்டு இமாலயம்
50 ரூபாய் நோட்டு இந்தியப் பாராளுமன்றம்
20 ரூபாய் நோட்டு கோவளம் கடற்கரை
10 ரூபாய் நோட்டு விவசாயியும் டிராக்டரும்

பொதுவாக காந்தியின் படமும் எல்லா நோட்டுக்களிலும் ஒரு புறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த அச்சகங்கள், தி செக்யூரிடி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (பஏஉ நஉஇமதஐபவ டதஐசபஐசஎ அசஈ ஙஐசபஐசஎ இஞதடஞதஅபஐஞச ஞஊ ஐசஈஐஅ – தலைமையகம் – புதுதில்லி) மற்றும் சல்பானி (மேற்கு வங்காளம்) ஆகிய இடங்களிலும் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது. இந்த இரு அச்சகங்கள் ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்ட “பாரதீய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த இரு அச்சகங்களும் வருடாந்திர தேவையில் 60% பணத்தை அச்சடிக்கின்றன.

விலக்கிக் கொள்ளப்பட்ட நோட்டுகள்!

10,000 ரூபாய் நோட்டு. 1938 – 1954 ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 1978-ஆம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டது.
5000 ரூபாய் நோட்டு. 1949, 1954-ஆம் ஆண்டுகளில் வெலியிடப்பட்டது. 1978-இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
1000 ரூபாய் நோட்டு. 1938, 1954, 2000 ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 1978 மற்றும் 2016 இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
500 ரூபாய் நோட்டு. 1987-இல் வெளியிடப்பட்டது. 2016-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. 2016-இல் விலக்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் 2016-இல் புதிய வடிவத்தில் வெளியிடப்பட்டது.

 

புதிய நோட்டு!

200 ரூபாய் நோட்டு. 2017 ஆகஸ்டில் வெளியிடப்பட்டது. இந்திய வரலாற்றில் 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

வங்கிகள் பற்றிய மேலும் சில தகவல்கள்!

இந்தியாவில் முதல் முதலாக கல்கத்தாவில் 1770 – ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியால் “இந்துஸ்தான் வங்கி’ என்ற பெயரில் ஒரு வங்கி தொடங்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட வங்கிகள் தொடங்கப்பட்டன.

கல்கத்தா வங்கி – (1806) — 1809 – ஆம் ஆண்டுகளில் இது வங்காள வங்கி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பம்பாய் வங்கி (1840)
மெட்ராஸ் வங்கி (!843)
மேற்கண்ட மூன்று வங்கிகளும் 27-1-1921 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டு “இம்பீரியல் வங்கி’ (IMPERIAL BANK) எனப் பெயரிடப்பட்டது. இந்த இம்பீரியல் வங்கியே 1955 – ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதல் வங்கி, 1894 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வக்கியாகும்.

உலக வங்கி! (WORLD BANK)

உலக வங்கி என்றழைக்கப்படும் மறு சீரமைப்பு, மற்றும் வளர்ச்சிக்கான சர்வ தேச வங்கி 1944-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1946 முதல் செயல்படத் தொடங்கியது. இதன் தலைமையிடம் வாஷிங்டன். நீண்டகால முதலீட்டிற்குத் தேவையான உதவிகளை வழங்கும் குறிக்கோளுடன் உலக வங்கி நிறுவப்பட்டது.

நீண்டகால கடனுதவி வழங்குவதுடன், அவசர மற்றும் பயனுள்ள சிறிய மற்றும் பெரிய திட்டங்களுக்குத் தேவையான கடனுதவியும் உலக வங்கி வழங்கி வருகிறது.

உலக வங்கியின் தலைவர் “டாக்டர் ஜிம் யாங் கிம்’ 2012 ஜூலையில் இப்பதவியை ஏற்ற இவர் ஐந்து ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.

பன்னாட்டு நிதி நிறுவனம் (INTERNATIONAL MONETARY FUND)

இந்த நிதி நிறுவனத்தை தோற்றுவிக்க பிரிட்டன் உட்ஸ் மாநாட்டில் 29 நாடுகள் சேர்ந்து முடிவு எடுத்தன. 1947 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது., அலுவலக மொழிகள் : ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானியம்.

இதன் நிதி ஆண்டு மே 1 முதல் ஏப்ரல் 30 வரை.

நோக்கங்கள்

உலக நாடுகளிடையே நிதி தொடர்பான ஒற்றுமையை மேம்படுத்துதல்.
அயல் நாட்டு நாணய மாற்று விகிதத்தை (EXCHANGE RATES) நிலைப்படுத்துதல்.
நாணய மாற்று கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவைகளாகும்.

Exit mobile version