Athiyaman team

திருக்குறள் 25 அதிகாரம் அன்புடைமை

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்

அன்புடைமை

பொதுத் தமிழ்  பகுதியில் பகுதி ஆ.  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை , பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு… போன்ற  25 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

 

இந்த பகுதியில் திருக்குறள் அன்புடைமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

 

 

 

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

TNPSC Group 2/2A- STUDY MATERIALS

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

 

 

அன்புடைமை

 

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

 

பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்பு கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.

 

 

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

 

பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது எண்ணுவர் அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

 

 

  1. அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு

 

பொருள்: உடம்போமு உயிர் இமைந்து இருப்பதைப் போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.

 

 

  1. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

 

பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.

 

 

  1. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு

 

பொருள்: அந்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர். 

 

 

  1. அறத்திற்கே அன்புசார் என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

 

பொருள்: அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர் வீரத்திற்கும் அன்புதான் துணை. 

 

 

 

  1. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்

 

பொருள்: எலும்பில்லாத உயரிகளை வெயில் வருத்தி அழிப்பதுபோல, அன்பில்லாத உயரிகளை அறம் வருத்தி அழிக்கும். 

 

 

  1. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று

 

பொருள்: பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது. 

 

 

  1. புறத்துறப்பு எல்லாம் எவனசெய்யும் யாக்கை

அகத்துறப்பு அன்பி லவர்க்கு

 

பொருள்: நெஞ்சில் அன்பு இல்லாதவர்கு, கைகால் போன்ற உடல் உருப்புகளால் என்ன பயன்? 

 

  1. அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

 

பொருள்: அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம் அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான். அங்கு உயிர் இல்லை.

பொதுத் தமிழ் திருக்குறள் அன்புடைமை அதிகாரம் PDF

  


பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

Exit mobile version