10 February 2026 Current Affairs in Tamil – HINDU TAMIL
TNPSC Current Affairs Today in Tamil – இன்றைய தேதிக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், அரசு திட்டங்கள், பொருளாதாரம், விளையாட்டு மற்றும் அறிவியல் தொடர்பான முக்கிய தகவல்கள் அனைத்தும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. TNPSC Group 4, Group 2/2A, Group 1, VAO மற்றும் Police/Banking தேர்வர்களுக்கு பயன் தரும் Daily Current Affairs Notes & MCQ Quiz உடன் வழங்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுக்குத் தயாராகும் வகையில், கொடுக்கப்பட்ட செய்தித்தாள்களிலிருந்து (தேதி: பிப்ரவரி 10 , 2026) தொகுக்கப்பட்ட நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது சார்ந்த பின்னணித் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 10 -2026 நடப்பு நிகழ்வுகள்
✅ முக்கிய தினங்கள்
- தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day): பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10. இது 2015-ம் ஆண்டு தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) கீழ் 0-19 வயதுடையவர்களுக்காகத் தொடங்கப்பட்டது.
- உலக பருப்பு தினம் (World Pulses Day): பிப்ரவரி 10.
◦2025 கருப்பொருள்: ” உலகின் பருப்பு வகைகள்: எளிமையிலிருந்து சிறப்பிற்கு” .
✅அரசியல் – பொது நிர்வாகம் / நலத்திட்டங்கள்
🔹தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டம் – விரிவாக்கம்
- தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டது.
- இத்திட்டத்தை மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தின் மூலம் தினமும் 1.30 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பயனடைவார்கள்.
- சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக இத்திட்டம் 15 நவம்பர் 2025 அன்று தொடங்கப்பட்டது.
- அரசு சார்பில் தினமும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்துடன் சேர்த்து தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
🔹கிறிஸ்தவ தேவாலய சொத்துகள் நிர்வாகத்திற்கு தனி அமைப்பு – உயர் நீதிமன்ற உத்தரவு
- கிறிஸ்தவ தேவாலயங்களின் சொத்துகளை நிர்வகிக்க தனி அமைப்பு உருவாக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்து சமய அறநிலையத் துறை, வக்பு வாரியம் போல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் தனி நிர்வாக அமைப்பு தேவை என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
- தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
- வழக்கை இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என அமர்வு உத்தரவிட்டது.
- கிறிஸ்தவ தேவாலய சொத்துகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை சட்டப்பூர்வமாக நிர்வகிக்க அமைப்பு உருவாக்குவது குறித்து அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
🔹புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்
- தமிழ்நாட்டில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
- இதை அறிவித்தவர் – மா.சுப்பிரமணியன்,தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அமைச்சர்.
- கல்லூரிகள் அமைக்கப்பட உள்ள மாவட்டங்கள்:
திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை. - இக்கல்லூரிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளின் வளாகங்களில் தொடங்கப்பட உள்ளன.
- திட்டம் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. - இந்த அறிவிப்பு சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வெளியிடப்பட்டது.
🔹45 தொல்லியல் அகழாய்வுக்கு அனுமதி – தமிழ்நாடு
- 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு 45 தொல்லியல் அகழாய்வு பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
- ஆண்டுவாரியான பரிந்துரைகள்: 2021–12, 2022–8, 2023–3, 2024–10, 2025–12.
- கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்ததாவது: 2025-ல் வந்த 12 திட்டங்களில் 8 பரிசீலனையில் உள்ளன; மீதமுள்ள பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன.
🔹கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – தமிழ்நாடு
- கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
- இந்த தகவலை சி.வி.கணேசன் தெரிவித்தார் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்) .
- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
- 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்
- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் – 1976
- பிரிவு 23 – மனிதக் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பு தடை
- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் : தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
🔹சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – இண்டியா கூட்டணி
- மக்களவையில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இண்டியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம்.
- சபாநாயகர் ஓம் பிர்லா மீது தீர்மானம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
- குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது.
கூடுதல் தகவல்
அரசியலமைப்புச் சட்டம் விதி 94(c)-ன் படி, சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
✅அறிவியல் & தொழில்நுட்பம்
🔹அடல் டிங்கரிங் ஆய்வகத் திட்டம்
- அடல் டிங்கரிங் ஆய்வகத் திட்டம் 6–12 வகுப்பு மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, புதுமை, படைப்பாற்றலை வளர்க்கிறது.
- 2026–27 மத்திய பட்ஜெட்டில் அறிவியல் ஆய்வகங்களுக்காக ரூ.3,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
🔹UTS மொபைல் செயலி நிறுத்தம் – மாற்றாக ‘ரயில் ஒன்’ செயலி
- UTS (Unreserved Ticketing System) மொபைல் செயலி மார்ச் 1 முதல் நிறுத்தப்படுகிறது.
- UTS செயலி 2014 டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
- UTS செயலி மூலம் முன்பதிவில்லா, சீசன் மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
- UTS செயலிக்கு மாற்றாக ‘ரயில் ஒன் (RailOne)’ செயலியை பயன்படுத்துமாறு
இந்திய ரயில்வே பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
🔹பனப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் சொகுசு வாகன உற்பத்தி ஆலை தொடக்கம்
- ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் சொகுசு வாகன உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டது.
- ரூ. 900 கோடி முதலீட்டில் ‘ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR)’ வாகனங்களின் முதல் அலகு தொடங்கப்பட்டுள்ளது.
- தொழிற்சாலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- மொத்தமாக ரூ. 9,000 கோடி முதலீட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இந்த திட்டத்தின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- தமிழ்நாடு வாகன உற்பத்தி மையமாகவும், மின்வாகன உற்பத்தியின் தலைநகரமாகவும் விளங்குகிறது என முதல்வர் தெரிவித்தார்.
✅புவியியல்
🔹கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
- கரிக்கிலி பறவைகள் சரணாலயம் கடந்த 1972 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
- இச்சரணாலயத்தின் பரப்பளவு 151 ஏக்கர்.
- இங்கு – ஊசிவால் வாத்து, சாதா உள்ளான், நீலச்சிறகி போன்ற பறவைகள் அதிகமாக காணப்படுகின்றன.
- கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔹 கத்தரிக்காய் உற்பத்தி – உலகளாவிய நிலை
- உலகின் பெரும்பகுதி கத்தரிக்காய் தேவையை சீனா மற்றும் இந்தியா பூர்த்தி செய்கின்றன.
- சீனா – கத்தரிக்காய் உற்பத்தியில் உலகில் முதலிடம்.
- இந்தியா – இரண்டாமிடம்.
- எகிப்து – மூன்றாமிடம்.
மஞ்சள் உற்பத்தி – இந்தியாவின் நிலை
- மஞ்சள் உற்பத்தியில் சுமார் 70% பங்களிப்புடன் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.
- இந்தியாவில் மஞ்சள் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலங்கள்:
மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா.
✅ பல்வேறு துறைகளில் முக்கிய நபர்கள்
🔹திருக்குறள் மற்றும் காந்தி: மகாத்மா காந்தி தனது லண்டன் பயணத்தின் போது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயிடம் இருந்து திருக்குறள் பற்றி அறிந்து, பின்னர் அதை விரும்பிப் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔹பத்மஸ்ரீ விருது (குறைந்த வயது சாதனைகள்)
- சானியா மிர்சா– 19 வயதில் (2006) பத்மஸ்ரீ விருது பெற்ற குறைந்த வயது டென்னிஸ் வீராங்கனை.
- வைஷ்ணவ் சைலேஷ் ககாதே– 17 வயதில் (2025) விண்வெளி தொழில்நுட்ப பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார்.
✅விளையாட்டு
🔹டேபிள் டென்னிஸ் தொடர் – சென்னை
- WTT Star Contender 2028 – சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் இன்று (10) தொடங்குகிறது.
- போட்டிகள் மேவக்கோட்டையூர் – தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றன.
- இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
- இந்தியாவிலிருந்து 27 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
