Athiyaman team

கம்பராமாயணம் – இராமாவதாரம்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் / TNPSC பொதுத் தமிழ்

கம்பராமாயணம் – இராமாவதாரம்

சுருக்கமாக சில குறிப்புகள்

இராம + அயனம்= இராமாயணம்
வடமொழி இராமாயணத்தை எழுதியவர்  வால்மீகி முனிவர்.
தமிழில் எழுதியவர் (வழிநூல்)     –  கம்பர்.
இராமனுடைய வரலாற்றை இந்நூல் கூறுகிறது.
இராம + அயனம்= இராமாயணம். இது வட சொற்புணர்ச்சி, ரகரம் தமிழ் சொல்லின் முதல் எழுத்தாகாது. ஆகையால் இலக்கண விதிப்படி இகரத்தை முதலில் சேர்த்து  இராமாயணம் எனக் குறிக்கபடுகிறது.
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார். அவதாரம் என்ற வட சொல்லுக்கு ‘மேலிருந்து வந்தது’ என்று பொருள்.
கம்பராமாயணம் 6 காண்டங்களை கொண்டது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் , கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
கதையின் பின் தொடர்ச்சியாக உத்திர காண்டத்தை ஒட்டகூத்தர் எழுதினார்.
காண்டம் – கதையின் பெரும் பிரிவை குறிக்கும்.
படலம் என்பது சிறு பிரிவை குறிக்கும்.
பெருங்காப்பியத்திற்கு  உரிய  இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. பொருளமைதியலும், அணி அமைவலும் நடையாலும் உயர்ந்தது.
கம்பர் பிறந்த ஊர், தேரழுந்தூர்- நாகை மாவட்டம்.
பெற்றோர்: ஆதித்தன்.
கம்பரை புரந்த புரவலர் ‘சடையப்ப வள்ளல்’.
கம்பர் இயற்றிய பிற நூல்கள் –  சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
கம்பர் காலத்தில் வாழ்ந்தவர்கள் – செயங்கொண்டார், ஒட்டகூத்தர்.
‘கல்வியில் பெரியர் கம்பர்’, ‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்’, ‘விருத்தமெனும் ஒண்பாவில் உயர்கம்பன்’ என்று கம்பன் புகழப்படுகிறார்.

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

 

கம்பராமாயணம்

கம்பராமாயணம் நூல் அமைப்பு:

காண்டம்:

  1. பாலகாண்டம்
  2. அயோத்தியா காண்டம்
  3. ஆரண்ய காண்டம்
  4. கிஷ்கிந்தா காண்டம்
  5. சுந்தர காண்டம்
  6. யுத்த காண்டம்

இராமனின் தம்பியர் மூவர்:

  1. பரதன்
  2. இலக்குவன்
  3. சத்ருக்கனன்

இராமனால் தம்பியராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர்:

  1. குகன்
  2. சுக்ரீவன்
  3. வீடணன்

கம்பர் எழுதிய பிற நூல்கள்:

  1. ஏர் எழுபது
  2. திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது)
  3. சடகோபர் அந்தாதி
  4. சரசுவதி அந்தாதி
  5. கம்பர் மகன் அம்பிகாபதி

புகழுரைகள்:

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

“கம்பனைப் போல வள்ளுவனைப் போல்

இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதி

மேற்கோள்:

“இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்”

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்”

“வீரமும் களத்தே போட்டு வெறும் கையேடு இலங்கை புக்கான்”

“இன்று போய் நாளை வா”

“வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

“பேசுவது மானம் இடைப்பேணுவது காமம்

  கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்”

“இற்பிறப்பு என்பெதான்றும் இரும்பொற என்பதான்றும்

  கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்”

“கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.

“தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க”

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்”

“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே

  இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ”

“உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”

“கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே”

“கை வண்ணம் அங்குக் கண்டேன்

  கால்வண்ணம் இங்குக் கண்டேன்”

“ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ”

“அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா”

“விருந்துவரின் என்னுறுமோ என்று விம்மும்”

கம்பராமாயணம்:

தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. – கம்பர்

அயோத்தியா காண்டம்:

குகன் படலம்

ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல்திரள் தோளினான்.

துடியன் நாயினன் தோல்செருப்பு ஆர்த்தபேர்
அடியன் அல்செறிந் தன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருங்கலின் நீர்முகில்
இடியி னோடுஎழுந் தாலன்ன ஈட்டினான்.

  1. “சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
    மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்
    ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தான்
    இருந்த வள்ளலைக் காணவந் தெய்தினான்.”
  2. “கூவாமுன்னம்இளையோன் குறுகிநீ
    ஆவான் யார்என அன்பின் இறைஞ்சினான்
    தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
    நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்.”

நிற்றி ஈண்டு என்றுபுக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன் என்றான்

அண்ணலும் விரும்பி என்பால் அழைத்திநீ அவனை என்றான்
பண்ணவன் வருக என்னப் பிரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட  குஞ்சி
மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து நின்றான்.

இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவ தாகத்
திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன வீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்

அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த வன்றே
பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்

கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய செய்குவென் அடிமை என்றான்.

சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும்
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமையெல்லாம்  அருளுதிர் விடைஎன்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா.

விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுவீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்.

அன்னவன் உரைகளோ அமலனும் உரைநேர்வான்
என்னுயிர் அனையாய்நீ இளவல்உன் இளையான் இந்
நன்னுத லவள்நின்கேள் நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது. நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.

Exit mobile version