Site icon Athiyaman team

Right to information தகவல் அறியும் உரிமை – Indian Polity

Right to information  – Indian Polity 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (மத்திய சட்டம் – 22) 2005   

2005 முதல் அமலுக்கு வந்துள்ளது இச்சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு  தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை (கட்டணங்கள்) விதிகள் 2005 அரசாணை (சிலை) எண் 989 , பொது (பணியாளர் – தொகுதி 1 மற்றும் சட்ட மன்றம்) துறை நாள் 07-10-2005 வெளியிடப்பட்டது.

2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி   அன்று நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம் முன்பு இருந்த தகவல் சுதந்திரச் சட்டம், 2002 ற்கு மாற்றாக இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் ‘பொது அலுவலகத்திடமிருந்து (அரசின் கீழ் இயங்கும் அமைப்பு அல்லது அரசின் தன்னிச்சையான நிறுவனம்) தகவல் கோரினால், அந்த அலுவலகம்.

துரிதமாக அல்லது 30 நாட்களுக்குள்

எந்த ஒரு தனிநபரின் உயிர் அல்லது தனியுரிமை சம்பந்தமான தகவல் கோரினால் 48 மணி நேரத்திற்குள்]

துணைப் பொதுத் தகவல் வழங்கும் அதிகாரியிடம் (Asst. PIO) தகவல் கோரப்பட்ட 35 நாட்களுக்குள்.

மூன்றாவது நபர் தலையீட்டின் போது தகவல் கோரினால் 40 நாட்களுக்குள்

பட்டியலிடப்பட்ட பாதுகாப்பு/புலனாய்வு நிறுவனங்களிடமிருந்து மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான தகவல்களைக் கோரினால் 45 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

மத்திய தகவல் ஆணையம் :

 தொடங்கப்பட்ட ஆண்டு 2005

 முதல் தலைமை தகவல் ஆணையர் : வாஹத் ஹபிபுல்லா

 தற்போதைய தகவல் ஆணையர் :Sudhir Bhargava – Assumed office :1 January 2019

Radha Krishna Mathur

 

  1. நோக்கம்

 ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு அதிகாரிகளிடம் இருந்து தகவல்களைப் பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்கும் வகையில் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதையும்

ஊழலைக் கட்டுப்படுத்துவதையும் அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவைகள் மக்களுக்கு கட்டுப்பட்டுள்ளதை உறுதிசெய்வதையும் இச்சட்டம் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

மக்களுக்கு தகவல்கள் வழங்குதற்கான ஒரு செயல் வடிவத்தை இச்சட்டம் உருவாக்கியுள்ளது.

 தன்னியல்பாகவும்  கோரிக்கையின் அடிப்படையிலும் மக்களுக்குத் தகவல்களை வழங்க வேண்டியதை அரசு அதிகாரிகளின் முக்கியக் கடமையாக இச்சட்டம் உருவாக்கியுள்ளது.

 மக்களுக்குத் தகவல்கள் அளிப்பதைத் தடை செய்யும் அரசு ஆவணங்கள் ரகசியச் சட்டம் 1923 போன்ற முந்தைய அனைத்துச் சட்டங்கள்  அரசாணைகள் போன்ற  அனைத்தையும் இப்புதிய சட்டம் ரத்து  செய்கிறது.

  1. அதிகார வரம்பு

 மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் சொந்தமாகவோ நேரடியாகவோ அல்லது நிதி உதவி மூலமாகவோ உருவாக்கப்பட்டுள்ள அனைத்து விதமான அலுவலகங்களும் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன (இந்த வரம்பிற்குள் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும்  நகரமன்றங்களும் கிராமப் பஞ்சாயத்து களும் கூட உள்ளடங்கியுள்ளன)

மேற்கூறிய அரசு மற்றும் அரசு நிர்வாகங்களின் நேரடி கட்டுப்பாட்டிலோ நிதி உதவியிலோ செயல்படும் அனைத்து அலுவலகங்களும் தகவல் அறிவும் உரிமையை மக்களுக்கு வழங்கக் கடமைப்பட்டுள்ளன.

 அரசின் நிதி உதவியை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறும் அனைத்து அரசு சாரா

அமைப்புகள் மீதும் இச்சட்டம் அமல்படுத்தப்படும்.

  1. தகவல் என்பது

 பதிவேடுகள் ஆவணங்கள் அலுவலகக் குறிப்புகள் மின்  அஞ்சல்கள்  கருத்துரைகள் ஆலோசனைகள்  பத்திரிக்கைக் -குறிப்புகள் சுற்றறிக்கைகள் ஆணைகள் தினசரிக் குறிப்புகள்

ஒப்பந்தங்கள் அறிக்கைகள் தாங்கள் மாதிரிகள் முன்வடிவங்கள் மின்னணு வடிவில் பதிவாகியுள்ள தகவல்கள் தரவுகள் என அனைத்தும் மக்கள்அறிந்து கொள்ள உரிமை உள்ளது.

  1. பதிவேடுகள் என்பது அனைத்து விதமான ஆவணங்கள் கையெழுத்து மூலப் பிரதிகள் மற்றும் கோப்புகள்

 நுண் சுருள்  நுண் புகைநகல் தொலை புகைப்பட நகல் போன்ற வடிவங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணத்தின் நகல்கள்.

 நுண் சுருளில் (பெரிதுபடுத்தியோ அல்லாமலோ) பொதியப்பட்ட உருவம் அமலுப்படுத்த உருவங்களின் மறுபதிப்புகள்.

 கணினி போன்ற சாதனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் போன்றவை அனைத்தும் தகவல்கள் அறிந்து கொள்வதற்கான பதிவேடுகள் ஆகும்.

  1. தகவல் பெறும் உரிமை என்பது

 பணிகள் ஆவணங்கள் பதிவேடுகளை ஆய்வு செய்யும் உரிமை தகவல் அறியும் உரிமைச் சட்டம்

 குறிப்புகள் சுருக்கங்கள் போன்றவற்றை பெறும் உரிமை அல்லது சான்று நகல்கள் பெறும் உரிமை.

 மாதிரிகள் எடுக்கும் உரிமை

 மின்னணு வடிவத்தில் தகவல்களைப் பெறும் உரிமை பொதுநலன் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் பெறும் உரிமை.

 நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தகவல்களை மறுக்கக்கூடாது. எந்த நாளும்

சட்டங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு தகவல்களை மறுக்கக்கூடாது.

  1. பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியங்கள்

 நாட்டின் இறையாண்மை ஒருமைப்பாடு பாதுகாப்பு நாட்டின் பொருளாதார மற்றும் அறிவியல் நலன்கள் வெளியுறவு தொடர்பான தகவல்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியது.

Right to information தகவல் அறியும் உரிமை –  PDF

Exit mobile version