Site icon Athiyaman team

Union and Territories – Indian Polity

Indian Polity Union and Territories

யூனியனும் அதன் ஆட்சிப்பகுதியும்

 யூனியனும் அதன் ஆட்சிப்பகுதிகளும் (சரத்து 1-4)

 

இந்திய அரசியலமைப்பு  இந்தியாவின் நிலப்பரப்பை, அதாவது ஆட்சிப்பரப்பை தனது முதலாவது பகுதியில் தெளிவாக அறிவிக்கிறது.இப்பகுதியில் நான்கு பிரிவுகள் உள்ளன.

 

சரத்து 1. ஆட்சிப் பரப்பு :

 

முதலாவது பிரிவின் சரத்து 1(1)-ன்படி இந்தியா பல மாநிலங்களின்கூட்டிணைப்பு ஆகும். இந்தியா பாரதம் என்ற பெயராலும்வழங்கப்படலாம்.

 

சரத்து 1(2) ஆனது மாநிலங்களும்,அவற்றின் எல்லைகளும் முதலாம் அட்டவணையில்  குறிக்கப்பட்டவாறு  இருத்தல் வேண்டும் எனக் கூறுகிறது.

 

சரத்து 1(3) ஆனது இந்தியா எல்லையைப் பற்றி கூறுகிறது. மாநிலங்களின் எல்லைகளையும், முதலாம் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்களின் எல்லைகளையும், இந்தியா கையகப்படுத்தக் கூடுமெனப்படுகிற பிற எல்லைகளையும் உள்ளடக்கி இருத்தல் வேண்டும் எனக் கூறுகிறது.

சரத்து 2. புதிய மாநிலத்தைச் சேர்த்தல் அல்லது நிறுவுதல் :

 

சரத்து 2-ன்படி பாராளுமன்றம் ஒரு சட்டத்தின் வாயிலாகத்தான் பொருத்தமெனக் கருதும் ஒப்பந்த விதிமுறைகள், நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய ஒன்றியத்திற்குள் புதிய மாநிலங்களைச் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் புதிய மாநிலங்களை இந்திய ஒன்றியத்திற்குள் நிறுவவோ பாராளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கிறது.

 

சரத்து 3 . ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குதல், பரப்புகள், எல்லைகள்

மற்றும் பெயர்களை மாற்றுதல்:

 

இந்திய ஒன்றியத்திற்குள் ஒரு புதிய மாநிலத்தை உருவாக்க முடியும்.மேலும், ஏற்கனவே இருக்கும் மாநிலங்களின் பரப்புகளை, எல்லைகளை அல்லது பெயர்களை மாற்றவும் முடியும்.

 

இப்பிரிவின்படி பாராளுமன்றம் ஒருசட்டத்தின் வாயிலாக

 

  1. ஒரு மாநிலத்தின் எல்லையைப் பிரிப்பதாலோ அல்லது இரண்டு

அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை இணைப்பதாலோஅல்லது எந்த எல்லையையாவது

ஏதாவது ஒரு மாநிலத்தின் பகுதியுடன் இணைப்பதாலோ ஒரு புதிய

மாநிலத்தை உருவாக்கலாம்.

 

  1. எந்த மாநிலத்தினுடைய பரப்பையும் குறைக்கச் செய்யலாம்.

 

  1. எந்த மாநிலத்தினுடைய எல்லையையும் மாற்றலாம்

 

  1. எந்த மாநிலத்தினுடைய பெயரையும் மாற்றலாம்.

 

சரத்து 3: கீழ் மசோதா நிறைவேற்றப்படல்:

 

  1. குடியரசுத்தலைவரின் பரிந்துரையின்படி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவேண்டும்.

 

  1. குடியரசுத்தலைவர் பாதிக்கப்படும்அந்த மாநில சட்டமன்றத்திற்கு தனது கருத்தை குறிப்பிட்ட கால அளவிற்குள் தெரிவிக்க அனுப்பப்படல் வேண்டும்.

 

  1. எனினும் அந்த மாநில சட்டமன்றம் வெளியிடும் கருத்து குடியரசுத்தலை

வரையோ அல்லது நாடாளுமன்றத்தையோ கட்டுப்படுத்தாது.

 

  1. இவ்வாறு மாற்றி அமைக்கும் மசோதாபாராளுமன்றத்தில் சாதாரண

பெரும்பான்மையுடன் சாதாரணசட்டம் வாயிலாக நிறைவேற்றப்படவேண்டும்.

 

  1. ஆனால் இவ்வுறுப்பின்படி இந்திய நிலப்பகுதியை அயல்நாட்டிற்கு

கொடுக்க முடியாது. அப்படி ஏதாவது ஒரு நிலப்பகுதியை கொடுப்பதென்றால் சரத்து 368 கீழ்சட்டதிருத்தம் செய்யவேண்டும். தற்பொழுது 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளது.

 

 சரத்து 4. எவ்வாறு, புதிய மாநிலங்களைஉருவாக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம் என்ற வழிமுறையைஎடுத்துக் கூறுகிறது.

 

நாம் ஏற்கனவே பார்த்தது போலவே சிறப்பு நடைமுறைகளைப்

பின்பற்றாமலேயே எந்தவொரு சட்டத்தையும் இயற்றுவது போல சாதாரண பெரும்பான்மையில் இச்செயலை மேற்கொள்ளலாம்.

 

சுதேச மாநிலங்கள் இணைப்பு :

 

 

  1. காஷ்மீர் – 1948 இணைக்கப்பட்டது.

 

  1. ஹைதராபாத் – 1948 காவல்துறை நடவடிக்கையாலும்,

 

  1. ஜுனாகர் – 1949  ஒப்பந்தம் மக்கள் வாக்கெடுப்பு  மூலமாகவும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

 

சர்தார் வல்லபாய் பட்டேல்மற்றும் வி.பி.மேனன் ஆகியோர் தனது அரசியல் திறமையினாலும் கடுமையானநடவடிக்கைகளாலும் அந்தப்பகுதிகளை இந்திய யூனியனுடன்இணைத்தார்.

 

மொழிவாரியான மாநிலங்கள் உருவாக்கம்:

 

 

 

 

மாநிலங்கள் நிர்வாக வசதிகளின்அடிப்படையிலேயே பிரிக்கப்பட வேண்டுமேயன்றி மொழியின் அடிப்படையில் பிரிக்கப்படக் கூடாது எனக் கருத்து தெரிவித்தது.இக்குழுவின் முடிவுகள் திருப்தி அளிக்காததால் ஜவஹர்லால் நேரு,  வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகியோர் தலைமையில் மீண்டும் JVP  குழு நவம்பர் 1948-ல் அமைக்கப்பட்டது.

 

 

 

1950-க்கு பிறகு உருவாக்கப்பட்ட மாநிலங்கள் :

 

ஆந்திரப்பிரதேசம் மெட்ராஸில் சில பகுதிகளையும் சேர்த்து ஆந்திரப்பிரதேச மாநிலச் சட்டம் 1953-ஆம்ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

  1. குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா :

பம்பாய் (மறுசீரமைப்பு) 1960ன்படி பம்பாய் மாநிலம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என்ற இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

 

  1. கேரளா மாநில மறுசீரமைப்புச் சட்டம்:

1956-ன்படி (நவம்பர்)உருவாக்கப்பட்டது. இது திருவாங்கூர் மற்றும் கொச்சின் ஆகிய பகுதிகளைஉள்ளடக்கியது.

 

  1. கர்நாடகா: அரசர்களால் ஆளப்பட்ட மைசூர் மாநிலத்தில் இருந்து மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி உருவாக்கப்பட்டது. 1973-ல் கர்நாடகா என்று பெயர் மாற்றப்பட்டது.

 

  1. நாகலாந்து: நாகலாந்து மாநிலச்சட்டம் 1962ன்படி இம்மாநிலம் அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டது.

 

  1. அரியானா:  பஞ்சாப் மாநிலத்திலிருந்துபஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம் 1966-ன்படி இம்மாநிலம் அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டது.

 

  1. இமாசலப் பிரதேசம் : யூனியன் பிரதேசமாக இருந்த இமாச்சலப்பிரதேசம், இமாச்சலப்  பிரதேசமாநிலச் சட்டம் 1970-ன்படி மாநில அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.

 

  1. மேகாலயா : இது 23 அரசியலமைப்புதிருத்தச் சட்டம் 1969-ன்படி முதலில் அஸ்ஸாமில் இருந்துதுணை மாநிலமாக பிரிக்கப்பட்டது.

 

  1. பின்னர் 1971ம் ஆண்டு வடகிழக்குபகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம்1971-ன்படி முழுமையான மாநில அந்தஸ்து பெற்றது.

 

  1. மணிப்பூர், திரிபுரா : இந்த இரண்டுமாநிலங்களும் வடகிழக்கு பகுதிகள்

(மறுசீரமைப்பு) சட்டம் 1971-ன்படி யூனியன் பிரதேசமாக இருந்து மாநில அந்தஸ்துக்கு உயர்ந்தது.

 

10.சிக்கிம்: 35-வது அரசியலமைப்புதிருத்தச் சட்டம் 1974ன்படி சிக்கிமிற்கு இணை மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.

 

11.மிசோரம் : மிசோரம் மாநிலச் சட்டம் 1986-ன்படி முழுமையான மாநில

அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டது.

 

12.அருணாச்சலப் பிரதேசம் :அருணாச்சலப் பிரதேச மாநிலச்

சட்டம் 1986-ன்படி முழுமையான மாநில அந்தஸ்து பெற்றது.

 

13.கோவா : யூனியன் பிரதேசங்களான கோவா, டையு, டாமன்

ஆகியவற்றிலிருந்து கோவா பிரிக்கப்பட்டு கோவா, டாமன் மற்றும் டையூ மறுசீரமைப்புச் சட்டம் 1987-ன்படி மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், டாமன் மற்றும் டையூ ஆகியன யூனியன் பிரதேசங்களாகவே உள்ளன.

 

14.சட்டிஸ்கர் : 2000 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் மத்திய

பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 2000ன்படி உருவாக்கப்பட்டது.

 

15.உத்திராஞ்சல் : 2000 ஆம் ஆண்டுநவம்பர் 9 ஆம் நாள் உத்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டுஅரசியலமைப்புத் திருத்தச்சட்டம் 2000ன்படி உருவாக்கப்பட்டது.

 

16.ஜார்கண்ட் : 2000 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் நாள் பீகார் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு,அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 2000ன்படி உருவாக்கப்பட்டது.

 

யூனியன் பிரதேசங்கள்:

 

 

 

 

 

 

 

 

யூனியன் பிரதேசங்களின் நிர்வாகம்

(Administration of the Union Territories (UTs)):

 

Union and Territories  in tamil  Download PDF

Exit mobile version