Site icon Athiyaman team

2896 VAO பணியிடங்கள் காலி-தமிழக அரசு

TNPSC VAO  Vacancy 2019

தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்பும் வரை  ஓய்வுபெற்ற  VAO கொண்டு நிரப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மொத்தம் உள்ள 12616 விஏஓ பணியிடங்களில் 2896  VAO பணியிடங்கள் காலியாக உள்ளது. ஓய்வு பெற்ற VAO 1000   பேரை15 ஆயிரம் சம்பளத்திற்கு தற்காலிகமாக பணியமர்த்த உத்தரவு. காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சியின் மூலம் நிரப்பும் வரை தற்காலிக VAO பணியில் அமர்த்தப்படுவர்.

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.க்களை கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

முதல் கட்டமாக ஆயிரம் பேரை நியமித்து கொள்ளலாம் எனவும், மாதம் ரூ.15 ஆயிரம் வீதம், புதியவர்கள் நியமிக்கப்படும் வரையிலோ அல்லது ஓராண்டு காலம் வரையிலுமோ ஓய்வு பெற்றவர்களை நியமித்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 12, 616 விஏஓ பணியிடங்களில் , 2,896 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Tnpsc லிருந்து முன்னதாக வெளியிடப்பட்ட  குரூப்-4 தேர்வு அறிவிப்பில் 397 VAO காலியிடங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2013 14 ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை வெளியிட வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது இதனால் குரூப்-4 தேர்வை தடை செய்ய கோரிய வழக்கு விசாரணை வருகின்ற ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு

TNPSC Group 4 Detailed official Notification 2019

Exit mobile version