GROUP 4 RESULT- 2500 VACANCIES INCREASED
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு: அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகளை மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்டது கிராம நிர்வாக அலுவலகர், இடைநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் அதிகமான பெண்கள் தேர்வர்கள் அதிகம்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில், 7689 மையங்களில் நடத்தப்பட்ட இந்த சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவு இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஜூலையில் நடைபெற்ற குரூப் -4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 7,301 பணியிடங்கல் இருந்த நிலையில் குருப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஜனவரியில் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
GROUP 4 RESULT- 2500 VACANCIES INCREASED