Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(1 Nov 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 1 Nov, 2019
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
முக்கியமான நாட்கள்
நவம்பர் 01 – உலக சைவ தினம்
- உலக சைவ தினம் என்பது ஒவ்வொரு நவம்பர் 1 ம் தேதியும் உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்களால் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
- இங்கிலாந்து வேகன் சொசைட்டியின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக 1994 நவம்பர் 1 ஆம் தேதி சைவ தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது . வேகன் சொசைட்டி 1944 நவம்பரில் நிறுவப்பட்டது.
தமிழ்நாடு தினம் – நவம்பர் 1
- 1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலச் மறுசீரமைப்பிற்குப் பின்னர் ஆறு தசாப்தங்கள் கழித்து முதல்முறையாக, தமிழ்நாடு மாநில நிறுவன தினமானது நவம்பர் 1 அன்று கொண்டாடப்பட்டது.
- 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆனது 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், தமிழகம் என அழைக்கப்படும் தற்போதைய நிலப்பரப்பு முந்தைய மதராஸ் மாகாணத்திலிருந்துப் பிரிக்கப்பட்ட நாளைக் குறிக்கின்றது.
- இந்த நிலப்பரப்பிற்கு மதராஸ் மாநிலம் என்று பெயரிடப் பட்டது.
- ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மறைந்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா, இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பல தமிழ் அறிஞர்களும் அதற்காக குரல் கொடுத்தனர்.
- 1967 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார்.
- அதன் பின்னர் 1969 ஜனவரி 14 ஆம் தேதி முதல் மாநிலத்தின் பெயர் அதிகாரப் பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.
நவம்பர் 01-இந்தியா மொழிவாரி மாநிலப் பிரிப்பு தினம்
- 1956-ஆம் ஆண்டு nov 1 அன்று , இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 1956 நவம்பர் ஒன்றாம் தேதி கேரளாவும் தமிழ்நாடும் மொழிவாரி மாநிலங்களானது குறிப்பிடத்தக்கது.
- தற்போது 63 ஆண்டுகள் ஆன நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
- தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.
விருதுகள்
மத்திய அரசின் சிறப்பு விருது
- கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.
- வரும் நவம்பா் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கவுள்ள இந்த விழாவிற்கு, இது 50-ஆவது ஆண்டு என்கிற சிறப்பு அம்சமும் உள்ளது. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படுகிறது.இதனை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
அறிவியல் செய்திகள்
சந்திரயான்-2 நிலவில் மிக அரிய வாயு கண்டுபிடிப்பு
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆர்பிட்டரில் உள்ள சேஸ்-2 என்ற கருவி, நிலவில் இருக்கும் வாயுக்களை ஆராய்ந்து தகவல் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது.இந்த ஆர்பிட்டரில் வைக்கப்பட்டிருக்கும் சேஸ் 2 கருவி, நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 என்ற வாயு சுமார் 100 கி.மீ.ல் இருப்பதைக் கண்டறிந்து இஸ்ரோ மையத்துக்கு தெரிவித்துள்ளது.
குறிப்பு
நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வரும் இந்த ஆா்பிட்டரில், டிஎம்சி-2 (டெரைன் கேமரா), எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டா் (கிளாஸ்), சூரியசக்தி எக்ஸ்ரே மானிட்டா் (எக்ஸ்.எம்.எஸ்.), ஆா்பிட்டா் உயா் தர கேமரா (ஓ.ஹெச்.ஆா்.சி.), இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டா் (ஐஐஆா்எஸ்), இரட்டை அதிா்வலை ரேடாா் (டி.எப்.எஸ்.ஏ.ஆா்.) உள்பட 8 கருவிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இதுவரை டிஎம்சி-2, கிளாஸ், எக்ஸ்.எம்.எஸ்., ஓ.ஹெச்.ஆா்.சி. ஆகிய கருவிகள் மூலம் மட்டுமே தகவல்களையும், புகைப்படத்தையும் எடுத்து பூமிக்கு அனுப்பிவந்த ஆா்பிட்டா், பிறகு ஐஐஆா்எஸ் கருவி மூலமும் புகைப்படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
மாநில செய்திகள்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வசதி
- இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.அதன்படி நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகம் செய்யபப்ட்ட உள்ளது.
- இதுவரை காவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
இந்தியா, ஜெர்மனி இடையே முக்கிய ஒப்பந்தம்
புதுதில்லியில் இந்தியா, ஜெர்மனி இடையிலான 5-ஆவது ஆலோசனைக் கூட்டம் தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
குறிப்பாக வர்த்தகம்,பருவநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட அம்சங்கள் ,போக்குவரத்து, திறன் மேம்பாடு, பசுமை நகர்ப்புற இயக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய துறைகளில் இரு நாடுகளின் இடையிலான பங்களிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டது.. தொடர்ந்து இருநாடுகள் இடையே, விண்வெளி, விமானப் போக்குவரத்து, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- Nov – 1]
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
