Athiyaman team

திருக்குறள் 25 அதிகாரம் வலியறிதல் PDF

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்

வலியறிதல்

பொதுத் தமிழ்  பகுதியில் பகுதி ஆ.  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)
அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல்,
செய்நன்றி, சான்றாண்மை , பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை
கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு… போன்ற  25
அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.
இந்த பகுதியில் திருக்குறள் பொருட்பால்: வலியறிதல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

TNPSC Group 2/2A- STUDY MATERIALS

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

வலியறிதல்

  1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

 

  1. ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

பொருள்: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

 

  1. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

 

  1. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

பொருள்: மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

 

  1. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

பொருள்: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

 

  1. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

பொருள்: தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

 

  1. ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

பொருள்: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

 

  1. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

பொருள்: எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

 

  1. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருள்: இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

 

  1. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.

பொருள்: தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.

பொதுத் தமிழ் திருக்குறள் வலியறிதல் அதிகாரம் PDF

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

Exit mobile version