Athiyaman team

திருக்குறள் 25 அதிகாரம் ஒப்புரவறிதல் PDF

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்

ஒப்புரவறிதல்

பொதுத் தமிழ்  பகுதியில் பகுதி ஆ.  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)
அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல்,
செய்நன்றி, சான்றாண்மை , பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை
கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு… போன்ற  25
அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.
இந்த பகுதியில் திருக்குறள் பொருட்பால்: ஒப்புரவறிதல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

TNPSC Group 2/2A- STUDY MATERIALS

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

ஒப்புரவறிதல்

  1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.

பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

  1. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

பொருள்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

  1. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

பொருள்: ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

  1. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

பொருள்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

  1. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

பொருள்: ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

  1. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

பொருள்: பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

  1. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

பொருள்: தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

  1. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

பொருள்: பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

  1. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.

பொருள்: பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

பொதுத் தமிழ் திருக்குறள் ஒப்புரவறிதல் அதிகாரம் PDF

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

 

Exit mobile version