Site icon Athiyaman team

தொகை நூல்கள் – தமிழ் முக்கிய வினாக்கள்

தொகை நூல்கள்

பொதுத் தமிழ் – வினாக்கள்

Tamil Model Questions For All Exam

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB,  TN Police) தேவையான பொதுத் தமிழ் சார்ந்த தகவல்கள் (Important Tamil Model Questions / Notes) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

    1. புறம்,  புறப்பாட்டு என வழங்கப் பெறுவது

அ) அகநானூறு ஆ) பதிற்றுப்பத்து இ) புறநானூறு

  1. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள்

அ) ஐந்து ஆ) பதினொன்று இ)பத்து

  1. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்

அ) அகநானூறு ஆ) ஐங்குறுநூறு இ) புறநானூறு

  1. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள்

அ) 11 ஆ) 65 இ) 75

  1. புறநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்

அ) பெருந்தேவனார் ஆ) நக்கீரர் இ) கபிலர்

  1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

அ) குறிஞ்சிப்பாட்டு ஆ) முல்லைப்பாட்டு இ) பரிபாடல்

  1. அகநானூறு மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ) 100 ஆ)120 இ)180

  1. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை

அ) 4 முதல் 8 அடி வரை ஆ) 9 முதல் 12 அடி வரை இ) 13 முதல் 31 அடி வரை

  1. நற்றிணையைத் தொகுப்பித்தவன்

அ) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆ) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

இ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

  1. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை

அ) 4 முதல் 8 அடி வரை ஆ) 9 முதல் 12 அடி வரை

இ) 13 முதல் 31 அடி வரை

  1. கபிலரை ‘ வாய்மொழிக் கபிலர் ’ எனப் போற்றியவர்

அ) நக்கீரர் ஆ) பெருங்குன்றூர்க் கிழார் இ) மாறோக்கத்து நப்பசலையார்

  1. குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்

அ) கபிலர் ஆ) வரந்தருவார் இ) பெருந்தேவனார்

கூடுதல் வினாக்கள்

  1. பரிபாடல் என்னும் நூல்

அ) அகப்பாடல்களைக் கொண்டது

ஆ) அகப்புறப் பாடல்களைக் கொண்டது

இ) புறப்பாடல்களைக் கொண்டது

  1. கபிலர் எத்திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்

அ) முல்லைத்திணை ஆ) பாலைத்திணை இ) குறிஞ்சித்திணை

  1. புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

அ) பாரதியார் ஆ ) ஜி.யு. போப் இ ) கவிமணி

  1. அகநானூறுக்கு வழங்கும் மற்றொரு பெயர்

அ) நெடுந்தொகை ஆ) முல்லைப் பாட்டு இ) மணநூல்

Download Answer Key for Above Tamil Question 

தமிழ் தொகை நூல்கள் விடைகள்

Study Materials : Download

Online Test : Take Test

Current Affairs : Download 

Athiyaman Team provides tnpsc tamil notes, rrb science pdf, tntet tamil notes, tn police tamil  notes, tn si tamil  notes, tntet paper 1 science, tntet paper 2 tamil , tnpsc group 4, tnpsc group 2a tamil , tamil imporatant topics,  tamil questions and answers, tamil model questions, tamil online test for all exams..etc.

Exit mobile version