தொகை நூல்கள்
பொதுத் தமிழ் – வினாக்கள்
Tamil Model Questions For All Exam
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, TN Police) தேவையான பொதுத் தமிழ் சார்ந்த தகவல்கள் (Important Tamil Model Questions / Notes) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
1. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது
அ) அகநானூறு ஆ) பதிற்றுப்பத்து இ) புறநானூறு
- புறநானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள்
அ) ஐந்து ஆ) பதினொன்று இ)பத்து
- தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்
அ) அகநானூறு ஆ) ஐங்குறுநூறு இ) புறநானூறு
- புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள்
அ) 11 ஆ) 65 இ) 75
- புறநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்
அ) பெருந்தேவனார் ஆ) நக்கீரர் இ) கபிலர்
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ) குறிஞ்சிப்பாட்டு ஆ) முல்லைப்பாட்டு இ) பரிபாடல்
- அகநானூறு மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
அ) 100 ஆ)120 இ)180
- அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
அ) 4 முதல் 8 அடி வரை ஆ) 9 முதல் 12 அடி வரை இ) 13 முதல் 31 அடி வரை
- நற்றிணையைத் தொகுப்பித்தவன்
அ) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆ) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
இ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- நற்றிணைப் பாக்களின் அடிவரையறை
அ) 4 முதல் 8 அடி வரை ஆ) 9 முதல் 12 அடி வரை
இ) 13 முதல் 31 அடி வரை
- கபிலரை ‘ வாய்மொழிக் கபிலர் ’ எனப் போற்றியவர்
அ) நக்கீரர் ஆ) பெருங்குன்றூர்க் கிழார் இ) மாறோக்கத்து நப்பசலையார்
- குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்
அ) கபிலர் ஆ) வரந்தருவார் இ) பெருந்தேவனார்
கூடுதல் வினாக்கள்
- பரிபாடல் என்னும் நூல்
அ) அகப்பாடல்களைக் கொண்டது
ஆ) அகப்புறப் பாடல்களைக் கொண்டது
இ) புறப்பாடல்களைக் கொண்டது
- கபிலர் எத்திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்
அ) முல்லைத்திணை ஆ) பாலைத்திணை இ) குறிஞ்சித்திணை
- புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
அ) பாரதியார் ஆ ) ஜி.யு. போப் இ ) கவிமணி
- அகநானூறுக்கு வழங்கும் மற்றொரு பெயர்
அ) நெடுந்தொகை ஆ) முல்லைப் பாட்டு இ) மணநூல்
Download Answer Key for Above Tamil Question
Study Materials : Download
Online Test : Take Test
Current Affairs : Download
Athiyaman Team provides tnpsc tamil notes, rrb science pdf, tntet tamil notes, tn police tamil notes, tn si tamil notes, tntet paper 1 science, tntet paper 2 tamil , tnpsc group 4, tnpsc group 2a tamil , tamil imporatant topics, tamil questions and answers, tamil model questions, tamil online test for all exams..etc.
