Site icon Athiyaman team

நிதி ஆயோக்- தமிழ்நாடு முதல் இடம்

எரிசக்தி ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.

ஆற்றல் மற்றும் காலநிலை திட்டங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

மாநில எரிசக்தி விநியோக நிறுவனங்களின் செயல்பாடு , ஆற்றல் பகிர்மானம், பயன்பாடு, இருப்பு, ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி எரிசக்தி ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு 85.4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளதாக நிதி அயோக் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பட்டியலில் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் 3ஆம் இடத்தில் உள்ளன.

Exit mobile version