TNPSC Group 2 2A Exam Survey Questions
TNPSC Group II & II A Survey Link
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்விற்கான கருத்துக் கேட்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் (Group 2 2A Survey Questions) என்னென்ன என்பது பற்றிய முழுமையான விபரம் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளன. அந்த வினாக்கள் என்னென்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முழுமையாக இந்த வினாக்களுக்கு என்ன பதில் அளிக்கலாம் என்று முடிவு செய்த பிறகு நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவேற்றம் செய்யவும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில் தொகுதி 2 மற்றும் 2a அடங்கிய பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில பாட கேள்விகளை நீக்கிவிட்டு பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும் முதன்மை எழுத்துத் தமிழில் மொழிபெயர்ப்பு பொருள் உணர்திறன் சுருக்கி வரைதல் கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்வர்களின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வாணையம் சில மாற்றங்கள் செய்தது. அதன்படி மொழிபெயர்ப்பு பகுதி தனியாக பிரிக்கப்பட்டு நடத்தவும் அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டுமெனவும் மதிப்பெண் நிர்ணயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
முடிவினை பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்றபோது ஏற்கனவே தேர்வுக்காக பழைய தேர்வு திட்டத்தின்படி தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு சில மாணவர்கள் தொகுதி2 மற்றும் தொகுதி 2 ஆகிய பதவிகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தொகுதி 2 மற்றும் இரண்டு திட்டங்கள் குறித்து இணையதளம் மூலம் தேர்வர்களின் கருத்துக்களை தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
தொகுதி 2 & 2A தேர்வு – வினாப்பட்டியல்
GROUP-II-IIA Survey Login Link
அதன்படி கருத்துக்களை பதிவு செய்வதற்கான வினாப்பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தின் (http://www.tnpsc.gov.in and http://www.tnpscexams.in) முகப்புப் பக்கத்தில் ஒருங்கிணைந்த தொகுதி-2 மற்றும் 2A தேர்வு தொடர்பான வினாப்பட்டியல் (Questionnaire for Combined Group-II and IIA Exam) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துக்களை 25. 11. 2019 முதல் 1.12. 2019 வரை பதிவு செய்யலாம். ஒருவர் ஒரு முறை மட்டுமே தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய இயலும் என்பதால் கேள்விகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு பதில் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
கீழே என்னென்ன வினாக்கள் என்பதை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய பதில்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் லாகின் செய்த பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.
இங்கு என்னென்ன வினாக்கள் என்பதை தொகுத்து கொடுத்துள்ளோம் படிக்க மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும்.
