Daily Current Affairs – August 1st to 3rd- Important Current Affairs For All Exams

Daily Current Affairs (August 1st – 3rd)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date :  August 1st – 3rd

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

பெண்கள் ஹாக்கி உலக கோப்பை

பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில்  இந்தியாவை 3-2 என்ற கணக்கில் அய்ராலாந்து வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆசிய நாடுகளின் சதுரங்கப் போட்டி கோப்பை

பாரம்பரிய ஆட்டத்தில் ஆண்கள் வெள்ளி பதக்கமும், பெண்கள் வெண்கலமும் வென்றனர்.

பிளிட்ஸ் ஆட்டத்தில் இந்திய பெண்கள் தங்கம் வென்றனர்

 

திட்டங்கள்

 

தேசிய ஊட்டச்சத்து திட்டம் 

அக்டோபர் 15 ம் தேதி, உலக உணவு தினத்தன்று சம்புஸ்த கேரளம்  என்ற ஒரு தேசிய ஊட்டச்சத்து திட்டம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.

ஊட்டச்சத்து மேம்படுத்துதல், உடல் பருமனைத் தடுக்கும் மற்றும் மாநிலத்தில் தாய்ப்பால் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட நோக்கங்களுடன் தொடங்குகிறது.

 

சேவா போஜ் யோஜனா

மாதத்திற்குக் குறைந்த பட்சம் 5,000 நபர்களுக்கு இலவச உணவினை வழங்குகின்ற, ஐந்து ஆண்டு காலமாக இருக்கின்ற மடாலயங்கள் (monasteries), தர்காக்கள் (dargahs), ஆசரமங்கள்(ashrams), திருச்சபைகள்(churches), மசூதிகள் (mosques), குருத்துவாராக்கள் (gurudwaras), கோயில்கள்(temples) போன்ற நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறது.

மக்களுக்கு இலவச உணவினை வழங்குகின்ற அனைத்து மத தொண்டு நிறுவனங்களுக்கும் சிறப்பு நிதியியல் உதவியினை வழங்குவதற்காக மத்திய கலாச்சார அமைச்சகமானது சேவா போஜ் யோஜனா (Seva Bhoj Yojna) எனும் புதிய திட்டத்தைத் துவங்கியுள்ளது.

இதற்காக இந்த நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (Central Goods and Services Tax -CGST), ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரித் (Integrated Goods and Services Tax -IGST) தொகையானது மத்திய அரசினால் இந்நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.



விருதுகள்

 

சர்வதேச பங்களிப்பு விருது

கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான (KITE) துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கே. அன்வார் சதாத் என்பவர்  சர்வதேச பங்களிப்பு விருது (கல்வி தொடர்பு மற்றும் தொழில்நுட்ப சங்கம் (AECT), அமெரிக்கா) பெற்றார்

 

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான 2013-2017 விருது

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான 2013-2017 விருதை ஸ்ரீ நஜ்மா ஹெப்துல்லா, ஸ்ரீ ஹக்மேதேவ் நாராயண் யாதவ், ஸ்ரீ குலாம் நபி ஆசாத், ஸ்ரீ தினேஷ் திரிவேதி மற்றும் ஸ்ரீ பர்துரிஹரி மஹாதாப் ஆகியோர் பெற்றனர்.

குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார்.

 

ஃபீல்ட்ஸ் பதக்கம்

கணிதத் துறையில் நோபல் பரிசுக்கு இணையான பரிசாக கருதப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை சர்வதேச கணித ஒன்றியம் (International Mathematical Union – IMU) 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அளித்து வருகிறது.

அக்ஷய் வெங்கடேஷ் [இந்திய-ஆஸ்திரேலிய கணிதவியலாளர்], காசெர் பிர்கர், பீட்டர் ஸ்கோல்ஸி, அலீசியோ ஃபிகாலி  ஆகியோருக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் (கணிதத்திற்கான நோபல் பரிசு) வழங்கப்பட்டது.

 

முக்கியமான நாட்கள்

 

உலக தாய்ப்பாலூட்டும் வாரம் [ஆகஸ்ட் 1 – 7 வரை]

தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்கவும் மற்றும் உலகம் முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பாலூட்டும் வாரம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.



தரவரிசை 

முன்னதாக தாய்ப்பாலூட்டும் நாடுகளின் பட்டியல் UNICEF மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் 76 நாடுகளில் இந்தியா 56வது இடத்தில் உள்ளது.

1 இலங்கை

2 வனுவாட்டு

3 புருண்டி

4 கஜகஸ்தான்

 

இணைய போர்ட்டல்

 

இ-பாசு ஹாட் போர்டல்

இனவிருத்தியாளர்கள் மற்றும் நாட்டுப்பசு வளர்ப்பாளர்களை இணைப்பதற்காக இ-பாசு ஹாட் போர்டலை (www.epashuhaat.gov.in) அரசு துவக்கியது.

 


நியமனங்கள்

வி. ராஜூ என்பவர்  பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு பிரிவின் தலைமைப் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார் .

 

 


 

 Download Daily Current Affairs [2018- Aug – 1 & 3]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: