Daily Current Affairs – July 1st to 3rd – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (July 1st – 3rd )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : July 1st – 3rd

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி

சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து. 

 

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்

ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் குவித்து, தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.

 

முக்கியமான நாள்கள்

 

தேசிய மருத்துவர்கள் தினம் – ஜூலை 1 

மருத்துவ உலகுக்கு சிறப்பு புரிந்த டாக்டர் பி.சி.ராய் நினைவாக அவரின் பிறந்தநாள் தான் மருத்துவர்கள் நாளாக  கொண்டாடப்படுகிறது.

டாக்டர்களை போற்றி பாராட்டும் வாழ்த்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 1ம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) கொண்டாடப்படுகிறது.

முதலாவது ஜி.எஸ்.டி. தினம் – ஜூலை 1

முதலாவது ஜி.எஸ்.டி. தினத்தை ஜூலை 1 அன்று அரசு கொண்டாடியது.

இந்திய வரிவிதிப்பு முறையில் வரலாறு காணாத சீர்திருத்த நடவடிக்கையின் முதலாம் ஆண்டு தின நிகழ்வில் நிதியமைச்சர், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

 

உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம்  – ஜூலை 2 

1994 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு பிரஸ் அசோசியேஷன் (AIPS) ஆல் அதன் 70 வது ஆண்டு விழாவில்  உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் உருவாக்கப்பட்டது.

உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் விளையாட்டுகளை ஊக்குவிக்கும்

பத்திரிகையாளர்களின் சேவையை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 அன்று கொண்டாடப்படுகிறது.

 

உலக யுஎஃப்ஒ ( அடையாளங் காண முடியா பறக்கும் பொருள் ) தினம் – ஜூலை 2 

உலக யுஎஃப்ஒ தினம் அடையாளங் காண முடியா பறக்கும் பொருள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இது உலக யுஎஃப்ஒ தின அமைப்பால் உருவாக்கப்பட்டது . முதலில் 2001 ஆம் ஆண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டது

அதன்பின் உலக யுஎஃப்ஒ தின அமைப்பு அதிகாரபூர்வமாக ஜூலை 2 ம் தேதியை உலக யுஎஃப்ஒ தினமாக அறிவித்தது.

 

 மாநாடுகள்

 

பேரழிவு ஆபத்து குறைப்பு பற்றிய ஆசிய அமைச்சக மாநாடு (AMCDRR 2018)

2018 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 03-06 வரை மங்கோலியாவில் உள்ள உலான்படார்-ல்  நடைப்பெற்ற  2018 (AMCDRR 2018) பேரழிவு ஆபத்து குறைப்பு பற்றிய ஆசிய மந்திரி மாநாடு நடைப்பெற்றது.  

இதில் இந்தியாவின் மாநில உள்துறை அமைச்சரான ஸ்ரீ கிரன் ரிஜிஜு தலைமையிலான இந்தியாவின் உயர்நிலை மந்திரிப் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.

AMCDRR 2018 தீம் : ‘Preventing Disaster Risk : Protecting Sustainable Development’


மின் துறை அமைச்சர்கள் மாநாடு

மத்திய அரசு “தீன்தயாள் உபாத்யாயா, ஒருங்கிணைந்த மின் மேம்பாடு, சவுபாக்யா”  மின் திட்டத்தை துவக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம்  நாடு முழுவதும், தடையில்லாமல், சீராக மின் சப்ளை செய்வதற்காக  தொடங்கப்பட்டது 

 

டல் மீன்வளம் குறித்த கூட்டம் 

தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் உள்ள “கடல் மீன்வளர்ப்பு-மரபுசார்ந்த வளர்ப்பில்” வேளாண்மை மற்றும் வேளாண்மை அமைச்சின் கலந்தாய்வுக் குழுவின் இடைநிலை அமர்வு கூட்டத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மந்திரி ஸ்ரீ ராதா மோகன் சிங்,  தலைமை தாங்கினார்.

 புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

பேரழிவு மேலாண்மை ஒப்பந்தம் 

ஒடிசா மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம், மாநிலத்தில் உள்ள அனைத்து பேரழிவுகளையும் திறம்பட நிர்வகிப்பதற்கான ஆரம்ப எச்சரிக்கை முறைமையை மேம்படுத்துவதற்காக, RIMES உடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.

நோக்கம் : அனைத்து வகையான பேரழிவுகளையும் மேலாண்மை செய்வதற்காக, தாய்லாந்தின் பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்கூட்டி எச்சரிக்கை அமைப்புடன்  (RIMES) இணைந்து ஒடிசா அரசாங்கம் செயல்படும்.

 

மிசோரமிற்கு ப்ரூ நபர்கள் இடம்பெயர ஒப்பந்தம்

இந்திய அரசு, மிசோரம் மற்றும் திரிபுரா அரசாங்கங்கள் மற்றும் மிசோரம் ப்ரூ இடம்பெயர்ந்த மக்கள் மன்றம் (MBDPF) 1997 ஆம் ஆண்டு முதல் மிசோரமில் இருந்து இடம்பெயர்ந்த ப்ரூ நபர்களை மறு குடி அமர்த்துதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இணைய போர்ட்டல்

 

தேர்தல் ஆணைய போர்ட்டல்

தேர்தல் ஆணையமானது “தேர்தல் நடைமுறையில் குறைபாடுகள் கொண்ட நபர்களை சேர்ப்பது” என்ற திட்டத்தின் கீழ், ஒரு தேசிய கொள்கையை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த ஆணையம் ஜூலை 3 ம் தேதி வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு, குறைபாடுகள் கொண்ட நபர்களுக்குத் (PwDs) தனிப்பிரிவுடன் கூடிய போர்ட்டலைத் தொடங்கியது.

 

 மொபைல் செயலிகள் 

cVIGIL

தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய “cVIGIL” என்னும் செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

 

அறிவியல் செய்திகள்

 

புற்றுநோயை  குணப்படுத்த பசுவின்  சிறுநீர் 

குஜராத்தின் ஜூனாகத் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி விஞ்ஞானிகள், பசுவின் சிறுநீர் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முதல் முயற்சியில் வெற்றி பெற்றனர்.

இதில் வாய், சிறுநீரகம், நுரையீரல், தோல் மற்றும் மார்பக போன்ற பொதுவான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என தெரிவித்தார்.


ஒரு கிரகத்தின் பிறப்பு 

சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு வானியலாளரின் மிகப்பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒரு கிரகத்தின் பிறப்பை படம் எடுத்தனர்.

வானியலாளர்கள் ஒரு இளம் நட்சத்திரத்தை சுற்றி சுழலுகின்ற தூசியில் ஒரு புதிய கிரகம் உருவாகுவதின் முதல் உறுதி படத்தை எடுத்தனர்.

இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த ஏவுகணை 

இந்தியாவின் மிக நீண்ட தூர ஏவுகணை  அக்னி- 5 மிக விரைவில் அணுசக்தி ஆயுதக்கிடங்கில் சேர்க்கப்படும். 

அக்னி-வி என்பது ஒரு இடைநிலை ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை (ஐஆர்பிஎம்) ஆகும்.

இது 5,000 கி.மீ.வரை செல்லும் திறன் கொண்டது.

 

விருதுகள்

 

கிரீன் கோ தங்க சான்றிதழ்

தொழிற்சாலைகள் எடுக்கப்படும்  ஆற்றல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

திருச்சியில் தெற்கு ரெயில்வே நிர்வகிக்கும் கோல்டன் ராக் ஒர்க்ஷாப் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மூலம் கிரீன் கோ தங்க சான்றிதழை பெற்றுள்ளது .

 

நியமனங்கள்

 

மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதி

ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஓபராடோர் மெக்சிகோவின்  புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். 

தேர்தலில் நிறைய ஓட்டு எண்ணிக்கை பெற்று வென்றுள்ளார்.

 

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சத்ய ஸ்ரீ இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.

 

ஸ்டீல் ஆதாரிட்டி ஆப் இந்தியா (SAIL) சி.எம்.டி.

சரஸ்வதி பிரசாத் என்பவர் ஸ்டீல் ஆதாரிட்டி ஆப் இந்தியா (SAIL) சி.எம்.டி.யாக நியமிக்கப்பட்டார்.

 Adhiyaman team Current Affairs, Athiyaman Team Current Affairs, Current Affairs in Tamil, Current Affairs PDF Files, Daily Current Affairs, Railway Current Affairs,
TNPSC Current Affairs

உலக செய்திகள்

சிறந்த பல் மருத்துவ கல்லூரி MAIDS 

டெல்லி மவுலானா ஆசாத் இன்ஸ்டிடியூட் ஆஃப் டென்டல் சயின்சஸ் (MAIDS) தொடர்ந்து ஏழாவது ஆண்டாக “இந்தியாவின் சிறந்த பல் மருத்துவக் கல்லூரி” எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


KVIC இ-மார்க்கெட்டிங் 

புதுடில்லியில் உள்ள காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (KIMIS) என்ற பெயரில் காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் (KVIC)   இ-மார்க்கெட்டிங் அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியது.


இந்தியாவின் முதலாவது காதி மால்

ஜார்க்கண்ட் மாநிலம்  அதன் முதல் ‘காதி மால்’ அமைத்து வருகிறது.

இது காதி மற்றும் காதி பொருட்களை தயாரித்து  சந்தைக்கு ஊக்கமளிக்க தொடங்கியது .

ஹைதராபாத் அரசு பள்ளிகளில் சிறப்பு லட்டு

மத்திய அரசின் “Beti Bachao Beti Padao” திட்டத்தின் கீழ் கூடுதல் ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் முதல் நகரம் ஹைதராபாத் ஆகும்.

ஜூலை மாதத்தில் இருந்து ஹைதராபாத் அரசுப் பள்ளிகளில் பெண்களுக்கு ராகி, நெய், வெல்லம், உலர்ந்த பழங்கள், நட்ஸ் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிறப்பு லட்டு வழங்கத்திட்டம் தொடங்கியது.

 

கார்கில் வெற்றி

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவம் கண்ட வெற்றியை கொண்டாட இந்திய ராணுவம் இருசக்கர வாகன சிறப்பு பயணம் நடத்தியது.

இதில் ராணுவ காவல்படையின் இருசக்கர வாகன குழுவான “ஸ்வேத் அஷ்வ்” நடத்திய சிறப்பு பயணம் பெங்களூரில் நேற்று கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

 

விருதுகள்

மகாராஷ்டிராவின் பால்கார் மீனவர் மிலன் ஷங்கர் தரே என்பவருக்கு  தேசிய கடல்வளம் தேடல் மற்றும் மீட்பு விருது வழங்கப்பட்டது.

 


 

Download Daily Current Affairs [2018- July – 1 & 3]

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: