Daily Current Affairs – September 1st to 3rd – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Sep 1st to 3rd)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  Sep 1st to 3rd

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

முதல் சர்வதேச கோ கோ சாம்பியன்ஷிப்

இந்திய அரசின் நிதியுதவியுடன் இங்கிலாந்தில் முதல் சர்வதேச கோ கோ கோப்பை சாம்பியன்ஷிப்பில் இந்திய கோ கோ அணி பங்கேற்க இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை (ஐ/சி) மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

ஆசிய விளையாட்டு 2018

49 கிலோ எடைப்பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப்-சர்க்கார் ஷிப்நாத் ஜோடி தங்கம் வென்றது. 

இந்திய அணியில் பதக்கம் வென்ற வயதான வீரர் ஆனார் பிரணாப் பர்தான்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

பெண்கள் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்தோனேசியா 2032 ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தும். டோக்கியோ – 2020 ஒலிம்பிக்ஸ்; பாரிஸ் – 2024 ஒலிம்பிக்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் – 2028 ஒலிம்பிக்ஸ்.

15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 289 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

பார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ்

பார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியில்  லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இதன்மூலம் மைக்கேல் ஸ்குமேக்கர்  வென்ற ஐந்து இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் சாதனையை சமன் செய்தார்.

 

52 வது உலக துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப்

52 வது உலக துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஞ்சம் மௌத்கில், ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்தார்.

 

விருதுகள்

 

சிறந்த ஆண்கள் வீரர் விருது 

குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிக் என்பவர்  UEFA ஆண்டின் சிறந்த ஆண்கள் வீரர் விருது் பெற்றார்.இவர் ஐரோப்பாவில் சிறந்த வீரராக வாக்களிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் பி.கே. மிஸ்ரா என்பவர்  ஆண்டின் சிறந்த மருத்துவ நபருக்கான மதிப்புமிக்க டாக்டர் பி.சி.ராயின் தேசிய விருது பெற்றார்.

 

 தரவரிசை

 

இந்தியாவின் நேரடி முதலீட்டு அட்டவணை

ஆர்.பி.ஐ. தரவுப்படி, மொரிஷியஸ் 2017-18ல் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) முதலிடம் வகிக்கிறது.இதன் பின்னர் சிங்கப்பூர் வகிக்கிறது.

 

புத்தகங்கள்

திரு.வெங்கையா நாயுடு எழுதிய நூலான  “நகரும், முன்னோக்கி நகரும் – அலுவலகத்தில் ஒரு வருடம்” என்ற புத்தகம் – (குடியரசுத் துணைத் தலைவராக அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையில்) பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.

 

 

நியமனங்கள்

 

பினாய் குமார் என்பவர்  ஸ்டீல் அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி தஹிரா சப்தர்  என்பவர் பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.

ஆர் மாதவன்  என்பவர் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டின் [HAL] தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக [CMD] நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி சுனில் மேத்தா  என்பவர் 2018-19க்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம்

 


 Download Daily Current Affairs [2018- Sep – 1 & 3]

 

 

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: