Daily Current Affairs – September 20th to 22nd – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Sep 20th to 22nd)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 Topic :  Daily Current Affairs 

Date  :  Sep 20th to 22nd

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

WADA ரஷ்யா மீதான தடை

உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பு (WADA) ரஷ்ய ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பான RUSADAவின் தடையை நீக்கி,  ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் போட்டிக்குத் திரும்ப வழிவகுத்தது.

 

ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

கத்தார் டோகாவில் ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 2-3 என்ற வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.

 

டிராக் ஆசியா கோப்பை

புது தில்லியில் 5வது டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் ஓட்டத்தின் தொடக்க நாளில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

மயூரி லுட் என்பவர்  மகளிர் ஜூனியர் 500 மீட்டர் பந்தயத்தில் நாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

 

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 21 – சர்வதேச சமாதான  தினம்

அனைத்து நாடுகளிலும் மக்களிடையேயும் சமாதானத்தின் கொள்கைகளை வலுப்படுத்த அர்ப்பணித்த ஒரு நாளாக இந்த பொது சபை அறிவித்துள்ளது. சர்வதேச சமாதான  தினம் 1981ல் ஐ.நா. பொதுச் சபையால் நிறுவப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச சமாதான தினம் அனுசரிக்கப்படுகிறது.

2018 தீம் :-  “The Right to Peace – The Universal Declaration of Human Rights at 70”

 

செப்டம்பர் 22 – உலக ரைனோ(காண்டாமிருகம்) தினம்

உலக ரைனோ(காண்டாமிருகம்) தினம் 2010ல் WWF- தென்னாப்பிரிக்காவால் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில், உலக ரைனோ தினம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய காண்டாமிருக வகைகளை உள்ளடக்கிய சர்வதேச வெற்றியாக வளர்ந்தது. 

இது ஐந்து வகையான ரைனோவைக் கொண்டாடுகிறது: கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்ரன் மற்றும் ஜாவன் ரைனோக்கள்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

எம்.எச்.ஏ. இஸ்ரோவுடன் ஒப்பந்தம்

உள்துறை அமைச்சகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO),விண்வெளி துறையுடன், அவசர நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை அமைப்பதற்கு ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

ஜார்கண்ட் அரசு என்.ஐ.சி.எல் உடன் ஒப்பந்தம்

தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் உடன் இணைந்து, ஜார்க்கண்ட் அரசு, மத்திய அரசின் முதன்மை சுகாதார திட்டம் – ஆயுஷ்மன் பாரத் யோஜனாவின் கீழ் மாநில மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

 

திட்டங்கள்

 

அடல் பிமிட் வியக்தி கல்யாண் யோஜனா

ஊழியர் காப்பீட்டு கழகம்(ESIC) மாநில ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் நபர்களுக்கு அடல் பிமிட் வியக்தி கல்யாண் யோஜனா என்ற புதிய திட்டத்தை அங்கீகரித்துள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டத்தில் புதிய வேலை வாய்ப்பைத் தேடும் போது, ​​அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் ஒரு நிவாரணம் இதுவாகும்.

 

விருதுகள்

 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

பளு தூக்கும் வீராங்கனை எஸ். மீராபாய் சானு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்த விருது கடந்த நான்கு ஆண்டுக்காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகிறது.

 

விலங்கியல் சமுதாய கௌரவம் விருது

லண்டன் விலங்கியல் சமுதாய கௌரவம் விருது  உயிரியலாளர் ஷபூதின் ஷேக் பெற்றார்.

 

ஆஸ்கார் 2019

‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாம் திரைப்படம் ஆஸ்கார் 2019க்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ரீமா தாஸால் இயக்கபட்டது .

 

 

அறிவியல் செய்திகள்

 

இஸ்ரோ ககன்யான் திட்டத்திற்கான ஏவுதளம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ), ககன்யான்  திட்டமான மனிதரைக் கொண்டு செல்லும் விண்வெளி விமான திட்டத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளப் பாதையை அமைக்கிறது.

 

உலக செய்திகள்

 

பறவை ஆராய்ச்சி மையம்

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (கே.வி.ஏ.எஸ்.யூ) பூகோடு வயநாடு மாவட்டத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாநிலத்தில் முதன்முதலில் பறக்க முடியாத பறவை ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளது.

 

மாநில செய்திகள்

வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி

குஜராத் அரசு மொத்த கட்ச் மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதி என்று அறிவித்துள்ளது.

 

நியமனங்கள்

 

ஸ்ரீ ஏ.கிதேஷ் சர்மா என்பவர் வெளியுறவு அமைச்சகம்(மேற்கு) செயலாளராக நியமிக்கப்பட்டார்.

விஜய் அமிர்தராஜ் என்பவர் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் (டிஎன்டிஏ) தலைவராக நியமிக்கப்பட்டார்.

 


 Download Daily Current Affairs [2018- Sep – 20 & 22]

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: