TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 17 Feb 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC February Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
Tamil Nadu
1.The Chief Minister Edappadi K.Palaniswami on February 16 unveiled Tamil Nadu’s new industrial policy 2021 and the micro, small and medium enterprises (MSME) policy, 2021. They are aimed at attracting large scale investments and job creation.
தொழில்துறை சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம், தொழில் வளர் தமிழகம்” நிகழ்ச்சி சென்னையில் 16.2.2021 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியிட்டார். இந்த கொள்கைகள் பெரிய அளவிலான முதலீடுகளையும் வேலைவாய்ப்பையும் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
2.The Tamil Nadu government will present its Budget on February 23, Assembly Secretary K.Srinivasan announced. The Deputy Chief Minister and Finance Minister O.Panneerselvam will present the interim Budget for 2021-22 at KalaivanarArangam.
2021 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று சட்டமன்ற செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவித்துள்ளார். துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் அவர்கள், தற்போது சட்டசபை செயல்படும் கலைவாணர் அரங்கத்தில் தாக்கல் செய்கிறார்.
3.A mobile application developed in-house by the TamilNadu e-Governance Agency (TNeGA) based on artificial intelligence techniques is being tested in a few districts by Tamil Nadu State Blind Control Society (TNSBCS) for screening the public for cataract.
தமிழ்நாடு மின்-ஆளுமை முகைமை (TNeGA) கண்புரை பிரச்சனைக்காக செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய மொபைல் பயன்பாடை ஒரு சில மாவட்டங்களில் தமிழக மாநில பார்வையற்றோர் கட்டுப்பாட்டு சங்கம் (TNSBCS) மூலம் பொதுமக்களிடம் சோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
India
4.Kiran Bedi was removed as the Lieutenant Governor of Puducherry. Telangana Governor Tamilisai Soundarajan has been given additional charge of the Union Territory until regular arrangements are made.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
5.S. Chinny Krishna, the co-founder of Blue Cross of India, has been conferred with the ‘Prani Mitra’ award for 2021 by the Animal Welfare Board of India for his lifetime service to animals. ‘Prani Mitra’ is the country’s highest award for animal welfare.
ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் இணை-நிறுவனர் எஸ்.சின்னி கிருஷ்ணா அவர்களுக்கு விலங்குகள் மீதான அவரது வாழ்நாள் சேவையை பாராட்டி 2021 ஆம் ஆண்டிற்கான ‘பிரணி மித்ரா’ விருது இந்திய விலங்கு நல வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலனுக்கான நாட்டின் மிக உயர்ந்த விருது ‘பிரணி மித்ரா’ ஆகும்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Which of the following policies were recently unveiled by the Tamil Nadu Chief Minister?
Industrial Policy, 2021
MSME Policy, 2021
Both 1 and 2
Neither 1 nor 2
பின்வரும் கொள்கைகளில் எது சமீபத்தில் தமிழக முதல்வரால் வெளியிடப்பட்டது?
தொழில்துறை கொள்கை, 2021
MSME கொள்கை, 2021
1 மற்றும் 2 இரண்டும் சரி
1 மற்றும் 2 இரண்டும் தவறு
2.Which institution confers the ‘Pani Mitra’ award in India?
Indian Institution of Forest Management
Animal Welfare Board of India
Wildlife Institute of India
National Biodiversity Authority
இந்தியாவில் ‘பானி மித்ரா’ விருதை வழங்கும் நிறுவனம் எது?
1. இந்திய வன மேலாண்மை நிறுவனம்
2. இந்திய விலங்கு நல வாரியம்
3. இந்திய வனவிலங்கு நிறுவனம்
4. தேசிய பல்லுயிர் ஆணையம்
3.Who is the Governor of Telangana State?
Kiran Bedi
Chandrashekhar Rao
Tamilisai Soundararajan
L. Murugan
தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநர் யார்?
கிரண் பேடி
சந்திரசேகர் ராவ்
தமிழிசை சௌந்தரராஜன்
எல்.முருகன்
4.Who is the current Finance Minister of Tamil Nadu?
Jayakumar
Dhanapal
Panneerselvam
Palanisami
தமிழகத்தின் தற்போதைய நிதியமைச்சர் யார்?
ஜெயக்குமார்
தனபால்
பன்னீர்செல்வம்
பழனிசாமி
5.Who has been recently given additional charge as the Lieutenant Governor of Puducherry?
Kiran Bedi
Chandrashekhar Rao
Tamilisai Soundararajan
L. Murugan
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக அண்மையில் யாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது?
கிரண் பேடி
சந்திரசேகர் ராவ்
தமிழிசை சௌந்தரராஜன்
எல்.முருகன்
6.The ‘Pani Mitra’ award is related to
Environment Protection
Healthcare Awareness
Animal Welfare
Water Management
‘பானி மித்ரா’ விருது எதனோடு தொடர்புடையது?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுகாதார விழிப்புணர்வு
விலங்கு நலன்
நீர் மேலாண்மை

