மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (18.1.2022) சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆயவின்போது, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள், குழுவின் செயல்பாடுகள், புதிய கொள்கைகள், தமிழ்நாடு புத்தாக்கத் திட்டங்கள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டங்கள், இது தொடர்பான உறுப்பினர்கள் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட துறைவாரியான ஆய்வுகள், கள ஆய்வுகள் மற்றும் அரசு துறை செயலாக்க ஆலோசனைகளைப் பற்றி விளக்கினார்.
* மனிதவள மேம்பாடு
* வாழ்க்கைத் தரம்
* மனித வாழ்க்கையின் ஆயுள்
* கல்வி கற்றல்
* குழந்தைகள் வளர்ப்பு
* வறுமை ஒழிப்பு
* மக்கள் நலவாழ்வு
* மனித உரிமைகள்
* சமூகநீதி
* விளிம்பு நிலை மக்கள்
– இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும்.
இக்கூட்டத்தில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. விக்ரம் கபூர், இ.ஆ.ப., முழுநேர உறுப்பினர் பேராசிரியர் ராம. சீனுவாசன், உறுப்பினர் செயலர் திரு. த.சு. ராஜ் சேகர், இ.ஆ.ப., மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களான திரு.மு. தீனபந்து, இ.ஆ.ப., (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் திரு டி.ஆர்.பி. ராஜா, சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
TNPSC
UNIT9
#மாநிலத்திட்டக்குழு
Chairman
Thiru. M.K. Stalin
Hon’ble Chief Minister
Vice-Chairman
Dr. J. Jeyaranjan
Full Time Member
Prof. R. Srinivasan
Part Time Members Dr. M. Vijayabaskar Dr. Sultan Ahmed Ismail Thiru. K. Deenabandu IAS., (Retd.) Dr. T.R.B. Rajaa, MLA Ms. Mallika Srinivasan Dr. J. Amalorpavanathan Dr. G. Sivaraman Padma Shri Dr. Narthaki Nataraj