டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 2A தேர்வு அறிவிப்பு நாளை மதியம் 12:30 வெளியாகும்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 2A தேர்வு அறிவிப்பு நாளை மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்படும் 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A  தேர்வு பற்றிய அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது  செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்படலாம் 

விரைவில் குரூப் 2 2A  தேர்விற்கான நோட்டிபிகேஷன் அறிவிக்கப்படும் 

எனவே தேர்வுக்கு படிப்பவர்கள் இன்னும் சிறப்பாக படித்து வரவும் நன்றி

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேர்வு தேதி நாளை (பிப்…18)…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு நாளை (பிப்ரவரி 18-ஆம் தேதி) வெளியாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், பணியிட விபரங்கள், தேர்வுகள் நடைபெறும் தேதி, விண்ணப்பிக்கும் முறை, மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்ட முழுமையான தகவல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop