Daily Current Affairs -April 12 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (April 12)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : April 12

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

தேசிய செய்திகள்

 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் சர்வதேச திட்ட உடன்பாடு 

உடன்படிக்கை :மியான்மர் நாட்டில் உள்ள யாக்யி – கலேவா நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்கான முதல் முறையாக உடன்பாட்டில் இந்தியா கையெழுத்து போட்டுள்ளது.

காரணம்:மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வணிகம், வர்த்தகம், சுகாதாரம், கல்வி, சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு.

 

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் L&T நிறுவனம் கட்டிய கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

தயாரிப்பு :இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ICGS விக்ரம் என்ற கப்பலை L&T நிறுவனம் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

ஒப்பந்தம் :மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரோந்து கப்பல்களை தயாரிப்பதற்காக  2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் L&T நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்திருந்தது.இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கப்பலை L&T நிறுவனம் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

 

பிஎஸ்எல்வி – சி41 வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய கண்காணிப்புச் செயற்கைக் கோள் IRNSS – II

செயற்கைக்கோள் விவரம் : இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் வாகனம்   PSLV – C41 , 12.04.2018 அன்று 1425 கிலோ கிராம் எடையுள்ள ஐஆர்என்எஸ்எஸ் – II கண்காணிப்புச் செயற்கைக் கோளினை வெற்றிகரமாகச் செலுத்தியது (43-வது பாய்ச்சலில்)

இடம் : ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையம்

நோக்கம் :-

 இந்தியப் பல்வகைக் கண்காணிப்பு” (நேவிக்) முறையின் புதிய செயற்கைக்கோளாக IRNSS – II உள்ளது.

இந்திய மண்டலத்திலும், இந்தியாவைச் சுற்றியுள்ள 1500 km பகுதியிலும் உள்ள நிலைமை குறித்த தகவல்களை வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புச் செயற்கைக்கோள்.

குறிப்பு :-

PSLV 52 இந்தியச் செயற்கைக் கோள்களையும், வெளிநாடுகளிலிருந்து 237 செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

காமன்வெல்த் போட்டி 

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம்

போட்டி : பெண்களுக்கான ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் (50 மீட்டர் -)

வெற்றி பெற்றவர் : தேஜாஸ்வினி

புள்ளிகள் : சவந்த் 6 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள்

பதக்கம் : வெள்ளி பதக்கம்

 

மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 3 பதக்கங்கள்

57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்கப்பதக்கம் வென்றார்
53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை பபிதாபோகட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கிரண் வெண்கலம் வென்றார்.

 

மல்யுத்த போட்டியில் சுஷில் குமார் தங்கம் வென்று சாதனை

சுஷில் குமார் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென்ஆப்ரிக்க வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும்.

 

பேட்மிண்டன் தரவரிசையில் ஸ்ரீகாந்த் கிதாம்பி

பேட்மிண்டன் போட்டிக்கான உலகத் தரவரிசையில் no 1 இடத்தை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் கிதாம்பி பெற்றுள்ளார்.

 

வட்டு எறிதலில் சீமா புனியா வெள்ளிப்பதக்கம் – நவ்ஜீத் டில்லியனுக்கு வெண்கலம்

போட்டி : பெண்களுக்கான வட்டு எறிதல்

வெற்றி பெற்றவர் :  இந்திய வீராங்கனை சீமா புனியா (41 மீட்டர் தூரம் வீசி)

பதக்கம் : வெள்ளிப்பதக்கம்

 

போட்டி : பெண்களுக்கான வட்டு எறிதல்

வெற்றி பெற்றவர் : இந்திய வீராங்கனை நவ்ஜீத் டில்லியன் (57.43 மீட்டர் தூரம் வீசி)

பதக்கம் : வெண்கலப்பதக்கம்.


Download Daily Current Affairs (2018-April-12)


 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: